மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 16, 2024

மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!



மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! Director of Elementary Education directed to conduct learning-teaching process using sandblasting app!

தொடக்கக் கல்வி - மணற்கேணி செயலி பயன்பாடு - நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான அனிமேஷன் வீடியோக்கள் - ஆசிரியர்கள் கைபேசி , உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் திறன் வகுப்பறைகளில் மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ளுதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை

ந.க.எண்.007694 / ஜெ2 / 2024,

நாள்.15.04.2024.

பொருள்:

தொடக்கக் கல்வி மணற்கேணி செயலி பயன்பாடு

நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான அனிமேஷன் வீடியோக்கள் - ஆசிரியர்கள் கைபேசி, உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் திறன் வகுப்பறைகளில் மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ளுதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக. பார்வை: சென்னை-6, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள், உறுப்பினர் செயலர்

அவர்களின் கடித நாள். 12.04.2024.

பார்வையில் காணும் கடிதத்தில், 6 முதல் 12ஆம் வகுப்பு மாநில பாடத்திட்ட கணிதம் மற்றும் அறிவியல் புத்தகங்களில் இடம்பெற்ற பாடங்களுக்கான காணொலி காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அனிமேஷன் வீடியோக்களாக மணற்கேணி செயலியில் வழங்கப்பட்டு உள்ளதாகவும் இம்மணற்கேணி செயலியின் தனித்துவமான சிறப்பம்சம் என்னவெனில், கற்கும் ஒவ்வொருவருக்கும் நன்கு திட்டமிட்ட வழிகாட்டுதலுடன் கூடிய கற்றல் பயணத்திற்கு வழிவகுப்பதாகவும் உயர்வகுப்புகளில் (XI or XII) கற்கும் ஒவ்வொரு பாடப் பொருளும் அதற்கு அடிப்படையாக கீழ் வகுப்புகளில் (VI, VII, VIII, IX or X) உள்ள பாடப் பொருட்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஒரு பாடப் பொருளை மிகத் தெளிவாகவும் உள்ளார்ந்த புரிதலுடனும் கற்க இயலும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தற்போது https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக மணற்கேணி செயலியை அணுகவும் பாட விவரங்களை பதிவிறக்கம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது எனவும் இச்செயலியின் வழியாக கட்டணம் எதுவுமின்றி அனைவரும் எளிதில் பதிவிறக்கம் செய்ய முடியும் (Open source and can be downloaded free) எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. எனவே, திறன் வகுப்பறைகள் மற்றும் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்களில் மணற்கேணி இணைய முகப்பின் (Manarkeni Portal) வழியாக கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை போதிப்பதற்கு ஏற்றவகையில் Smart Boardல் அனிமேஷன் வீடியோக்களை பாடவாரியாக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட பின்னர் 6 முதல் 8 வகுப்பு பாடங்களுக்கான அனிமேஷன் வீடியோக்களில் இடம்பெற்றுள்ள பாடக் கருத்துக்கள் மற்றும் அந்த வீடியோக்கள் நல்ல முறையில் இயங்குகின்றனவா என்பதை பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் முன்கூட்டியே சரிபார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், ஆசியர்கள் தங்கள் கைபேசியில் இச்செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்வதற்கு ஏற்றவாறு மணற்கேணி QR Code-ஐ (இணைக்கப்பட்டுள்ளது) ஒவ்வொரு பள்ளியிலும் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகம் அமையும் அறை மற்றும் 6-8 வகுப்பு மாணவர்கள் கல்வி பயிலும் வகுப்பறைகளிலும் ஒட்டி வைக்க வேண்டும்.

மணற்கேணி செயலியை பயன்படுத்தவும் பயன்படுத்தவும் அதன் மூலம் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை நன்முறையில் பயன்படுத்தவும் அனைத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு : QR Code CLICK HERE TO DOWNLOAD DEE - Manarkeni APP - Utilising in Middle Schools Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.