மாணவியரின் மேல்படிப்புக்கு வாகன வசதி; அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் நேசம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 10, 2024

மாணவியரின் மேல்படிப்புக்கு வாகன வசதி; அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் நேசம்



Vehicle facility for students for further studies; Courtesy of Headmaster of Government School - மாணவியரின் மேல்படிப்புக்கு வாகன வசதி; அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் நேசம்.

போக்குவரத்து வசதியின்றி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி படிப்பை தொடர முடியாத மாணவியருக்கு இலவசமாக ஷேர் ஆட்டோ ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார், எருக்குவாய் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர். ஆரணி அருகே ஒரு பக்கம் காப்புக் காடு, மறுபக்கம் ஆரணி ஆறு என்ற சூழலில் அமைந்துள்ளது எருக்குவாய் கிராமம். அந்த கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது.

இங்கு எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், அதன்பின் படிப்பை தொடர 8 கி.மீ., தொலைவில் உள்ள ஆரணிக்கு செல்ல வேண்டும். எந்த ஒரு போக்குவரத்து வசதியும் அந்த கிராமத்திற்கு இல்லை.

அதனால், பள்ளி மேல் படிப்புக்கு செல்லும் மாணவர்கள், 5 கி.மீ., நடந்து சென்று, பெரியபாளையம், ஆரணி சாலையில், ஷேர் ஆட்டோ அல்லது பேருந்து பிடித்து பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். மழைக்காலங்களில், ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் போது, 16 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இதுபோன்ற சிக்கல்களால், எருக்குவாய் கிராமத்தில் சில மாணவியர், பள்ளி மேல் படிப்பு தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

மாணவியரின் கல்வி பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில், எருக்குவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம், மூன்று ஆண்டுகளாக சில தனிநபர்களின் உதவியோடு இலவச ஷேர் ஆட்டோ வசதியை மாணவியருக்கு ஏற்பாடு செய்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இதற்கான மாதத் தொகை ஆட்டோ டிரைவருக்கு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.