ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய தற்போது நிலவரம் குறித்த கட்டுரை. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 6, 2024

ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய தற்போது நிலவரம் குறித்த கட்டுரை.



ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய தற்போது நிலவரம் குறித்த கட்டுரை.

சென்னை உயர் நீதிமன்ற கிளையில் மாண்புமிகு மகா தேவன் மற்றும் மாண்புமிகு முஹம்மது சபீக் கொண்ட இரண்டு நீதிபதிகள் அமர்வில் இரண்டு விதமான தீர்ப்புகள் வழங்க பட்டன.அவை

1.29.07.2011க்கு முன் அரசு உதவி பெறும் சிறு பான்மையற்ற பள்ளிகளில்பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுத தேவை இல்லை. 2. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 29.07.2011 க்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டாலும்,அவர்கள் பதவி உயர்வு பெரும் நேரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.இது அரசு உதவி பெறும் ஆசிரியர்கள்,அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

மேற்கண்ட இரண்டு விதமான தீர்ப்புகளில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவதாக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு மட்டும் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.முதலாவதாக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வில்லை.இதன் மூலம் தமிழக அரசு முதலாவதாக வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

எனவே 29.07.2011 க்கு முன் பணி நியமனம் செய்யப்பட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்ற அரசாணை வெளியிட்டால் அவர்கள் வாழ்வில் ஒளி வீசும். CLICK HERE TO DOWNLOAD Supreme court order PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.