பொதுத்தேர்வுக்கு முந்தைய நாள் மிகமுக்கியமானது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 14, 2024

பொதுத்தேர்வுக்கு முந்தைய நாள் மிகமுக்கியமானது!



The day before the General Exam is very important! பொதுத்தேர்வுக்கு முந்தைய நாள் மிகமுக்கியமானது!

பொதுத்தேர்வு நெருங்கிவிட்டது. நமது மாணவர்கள் சிறப்பாக எழுதி வெற்றி பெற உதவும் வழிமுறைகளை பார்த்து வருகிறோம். ஆண்டு முழுவதும் கடின உழைப்பைச் செலுத்தி படித்ததற்கான பலனை அறுவடை செய்வதற்கான நல்வாய்ப்பே தேர்வு. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள நல்ல ஆலோசனைகள் உதவும்.

இதோ தேர்வுக்கு முந்தைய நாளில் அறிந்துகொள்ள வேண்டியவை:

1. தேர்வு என்று, எப்போது, எந்த இடத்தில் நடைபெறும் ஆகியவை பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.

2. பாடத்திட்டத்துக்குத் தகுந்தபடி படிக்க வேண்டிய பகுதிகள் அனைத்தும் படிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும்.

3. எழுதி வைத்துள்ள முக்கிய குறிப்புகளை ஒருமுறை பார்த்து அவை அனைத்தும் நமது நினைவுக்கு வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

4. ஏதாவது ஒரு பகுதியை படிக்காமல் விட்டிருந்தாலும் வேகமாக அதைப்படித்து அதன் முக்கியக் குறிப்புகளையாவது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 5. பேனா, பென்சில், அழிப்பான், ஜியாமென்ட்ரி பாக்ஸ், முக்கியமாக ஹால்டிக்கெட் போன்றவற்றைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

6. ஏற்கெனவே எழுதிய தேர்வுகளில் பெற்ற அனுபவத்தை வைத்து பொதுத்தேர்வை சந்திக்க வேண்டும்.

7. பொதுத்தேர்வை கண்டுபயப்படாமல் முழு ஈடுபாடு ஆர்வம் ஆகியவற்றுடன் சந்திக்க தயார்நிலையில் இருக்கவேண்டும்.

8. தேர்வு குறித்தோ, வினாக்கள் குறித்தோவீண்விவாதம் செய்வது அநாவசியமானமனக்குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்பதால் முந்தைய நாள் விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

வெற்றி பெற வாழ்த்துகள்!

கட்டுரையாளர்: வே. போதுராசா, முதுகலை பட்டதாரி ஆசிரியர், தேனி; தொடர்புக்கு: pothurasav@gmail.com

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.