மாபெரும் கோரிக்கை உண்ணாவிரத போராட்டம் - தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 26, 2024

மாபெரும் கோரிக்கை உண்ணாவிரத போராட்டம் - தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு

Massive Demand Fast - Federation of Tamil Nadu Government Officers, Teachers and Local Government Employees Unions மாபெரும் கோரிக்கை உண்ணாவிரத போராட்டம் - தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சிவ.இளங்கோ இல்லம், நெ.7, நீலிவீராசாமி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.

கோரிக்கைகள்

தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வுதியத் திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டுமாய் இக்கூட்டமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும் தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது.

÷ தமிழ்நாடு அரசு நிதி பற்றாக்குறையினால் நிறுத்தி வைக்கப்பட்ட சரனர்விடுப்பு சலுகையினை பணியாளர்கள் பயன்பெற மீண்டும் உடனடியாக வழங்கிட வேண்டுமாய் இக்கூட்டமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும் தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது.

÷ தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-வது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத்தொகையினை பணியாளர்களுக்கு வழங்காமல், நிலுவையாக உள்ளதால், அதனை விடுவித்து 21 மாத நிலுவைத்தொகையினை வழங்கிட வேண்டுமாய் இக்கூட்டமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது. 01.06.2009 முதல் பணியேற்று 7-வது ஊதியக்குழுவின் மூலம் ஊதிய கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு ஓராண்டுகாலம் இடைவெளியில் சுமார் ரூ.15,000/-க்கும் குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை களைந்து உரிய ஊதியம் வழங்கிட வேண்டுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

÷ தலைமைச்செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலிப்பணியிடங்களையும் நிரப்பி, பதவி உயர்வினையும் வழங்க வேண்டுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், பொது சுகாதாரத்துறை, காவல்துறை, பொது நூலகத்துறை, மாநகராட்சி, நகராட்சி, உள்ளிட்ட பேரூராட்சிகள் அனைத்து துறைகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், பண்ணை பணியாளர்கள், ஓட்டுநர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் பகுதிநேர பணியாளர்கள் அனைவரது எதிர்கால வாழ்வாதாரம் கருதி பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டுமாய் இக்கூட்டமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது. தமிழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் 7, 14, 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு viami पुरंលណាក្លប់ा फुल्ल me-III, (Level-12) -II (Level-15), நிலை-1 (Level-16) என்ற காலமுறையில் பதவி உயர்வு (Time Bounded Promotion) வழங்கிட வேணுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

+ அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பழைய நிலையிலேயே உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டுமாயும், மாநில முன்னுரிமை எனக்கூறி வெளியிட்டுள்ள அரசாணை எண்.243-ஐ முழுமையாக இரத்து செய்திட வேண்டுமெனவும், இக்கூட்டமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.