10th தனித்தேர்வர்களுக்கான Hall Ticket Download - பதிவிறக்கம் செய்யும் முறை - DGE Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 23, 2024

10th தனித்தேர்வர்களுக்கான Hall Ticket Download - பதிவிறக்கம் செய்யும் முறை - DGE Proceedings



10th தனித்தேர்வர்களுக்கான Hall Ticket Download - பதிவிறக்கம் செய்யும் முறை - DGE Proceedings Hall Ticket Download for 10th Candidates - How to Download - DGE Proceedings

மார்ச்/ஏப்ரல் 2024 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தல் தொடர்பான செய்திக்குறிப்பு நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 24.02.2024 (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் முறைதனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று

"HALL TICKET" என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள

“SSLC PUBLIC EXAMINATION MARCH / APRIL-2024 HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை "Clok" செய்து தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் (Application Number) / நிரந்தரப் பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச்/ஏப்ரல் 2024பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் (Science Practical Examinations) 26.02.2024 முதல் 28.02.2024 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்துக்கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி ஒரு தேர்வரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.