பழைய பென்ஷன் திட்டம் இனி இல்லை - கை விரித்தது தமிழக அரசு - காற்றில் கரைந்தது திமுகவின் தேர்தல் வாக்குறுதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 30, 2024

பழைய பென்ஷன் திட்டம் இனி இல்லை - கை விரித்தது தமிழக அரசு - காற்றில் கரைந்தது திமுகவின் தேர்தல் வாக்குறுதி

The old pension scheme is no more - Tamil Nadu government has extended its hands - DMK's election promise has vanished - பழைய பென்ஷன் திட்டம் இனி இல்லை - கை விரித்தது தமிழக அரசு

☐‘குரூப் 4' அறிவிக்கையில் தமிழக அரசு அறிவிப்பு

☐ காற்றில் கரைந்தது திமுகவின் தேர்தல் வாக்குறுதி

புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் கிடையாது. குரூப் 4 தேர்வு அறிவிக்கை யில், ஊழியர்கள் பங்களிப்பு டன் கூடிய புதிய பென்ஷன் திட் டம்தான் அமல்படுத்தப்படும் என உறுதிபட தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு பணியில் 2003 ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு சேர்ந்தவர்களுக்கு பழைய பெ ன்ஷன் திட்டம் ரத்து செய்யப் பட்டு, பங்களிப்புடன் கூடிய புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் பழைய பென்ஷன் திட் டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வருகின்றனர். போராடி திமுக தேர்தல் வாக்குறுதி

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த கோரிக்கை யை வலியுறுத்தி அரசு ஊழி யர்கள் ஆசிரியர்கள் சங்கங்க ளின் கூட்டமைப்பான ஜாக் டோ - ஜியோ போராட்டம் நடத்தியது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வாய் ப்பு இல்லை என்பதை அப் போதைய முதல்வர் இபிஎஸ் வெளிப்படையாக அறிவித் தார். ஆனால் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் திமுக அரசு அமைந்தவுடன் நிறைவேற் றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இது தொடர்பாக திமுக கடந்த சட்டசபை தேர்த லின் போது தனது தேர்தல் அறிக்கையில் 84வது பக்கத்தில் 309 வது வாக்குறுதியாக, 'புதிய பென்ஷன் திட்டம் கைவிடப் பட்டு, பழைய பென்ஷன் திட் டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.