டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக்கூட்ட ( 04.01.2024 ) தீர்மானங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 4, 2024

டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக்கூட்ட ( 04.01.2024 ) தீர்மானங்கள்



டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக்கூட்ட ( 04.01.2024 ) தீர்மானங்கள்

டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் 04.01.2024 காலை 11.30 மணியளவில் திருச்சி , அருண்ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது . மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு . ச.மயில் , பொதுச்செயலாளர் , தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவர்கள் தலைமை ஏற்றார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)

டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் 04.01.2024 காலை 11.30 மணியளவில் திருச்சி, அருண்ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு ச.மயில், பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவர்கள் தலைமை ஏற்றார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

1. 13.10.2023 அன்று டிட்டோஜேக் பேரமைப்பு சென்னை DPI வளாகத்தில் தமிழக அரசு 30 அம்சகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் 12.10.2023 அன்று மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகள் மீது எந்தவித ஆணையும் 3 மாத காலமாகியும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை செயல்படுத்திட குறைந்த நடவடிக்கைகள் கூட இல்லாத நிலைக்கு டிட்டோஜேக் கடும் அதிருப்தியினைத் தெரிவித்துக்கொள்கிறது. ஏற்றுக்கொண்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆணைகளை விரைந்து பிறப்பிக்க மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை டிட்டோஜேக் பேரமைப்பு பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

2. தொடக்கக்கல்வித்துறையில் 60 ஆண்டுகாலமாக இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமை என்பதை மாற்றி அமைக்க அரசு ஒரு குழு அமைத்து அரசாணை வெளியிட்டது. அக்குழு யாரையும், எந்த சங்கத்தையும் அழைத்து பேசாமல் திடீரென மாநில முன்னுரிமையினைச் செயல்படுத்தும் அரசாணை 243-ஐ வெளியிடப்பட்டுள்ளது. இச்செயல் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ள அரசாணை 243-ஐ உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும். அவ்வாறு திரும்பப் பெறாவிட்டால் டிட்டோஜேக் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

06.01.2024 அன்று மாலை தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் அனைத்து இயக்கங்களின் வட்டார, மாவட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை மாவட்டத் தலைநகர்களில் நடத்துவது. * 11.01.2024 வியாழன் மாலை தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். * 27.01.2024 சனிக்கிழமை அன்று மாவட்ட அளவில் 1 நாள் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழக அரசு தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தி இருக்கும் மாநில முன்னுரிமையினை வலியுறுத்துகிற அரசாணை 243-ஐ உடனடியாக திரும்பப்பெற டிட்டோஜேக் பேரமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

CLICK HERE TO DOWNLOAD தீர்மானங்கள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.