30 ஆண்டுகளாக பணியாற்றும் இ.நி.ஆ கருத்து - அரசாணை:243 நாள் - 21.12.2023 வரவேற்போம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 4, 2024

30 ஆண்டுகளாக பணியாற்றும் இ.நி.ஆ கருத்து - அரசாணை:243 நாள் - 21.12.2023 வரவேற்போம்



30 ஆண்டுகளாக பணியாற்றும் இ.நி.ஆ கருத்து

அரசாணை:243 நாள் - 21.12.2023 வரவேற்போம்

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் ஏறத்தாழ 32,000 தொடக்கப்பள்ளிகளும், 6,000 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன.

இவற்றில் 80,000 இடைநிலைஆசியர்களும், 32,000 தொடக்கப்பள்ளித் தலைமைஆசிரியர்களும், 18,000 பட்டதாரி ஆசிரியர்களும்,6,000 நடுநிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்களும் பணிபுரியலாம் அல்லது பணிபுரிந்து வருகின்றனர்.

80,000 இடைநிலைஆசிரியர்களில் 32,000 நபர்களுக்கு மட்டும்தான் தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கும்.மிதமுள்ளவர்களுக்கு படிப்படிப்படியாகத்தான் பதவி உயர்வு கிடைக்கும்.

அதேபோல் 32,000 தொடக்கப்பள்ளித் தலைமைஆசிரியர்களில் முன்னுரிமை அடிப்படையில் முதல் 18,000 நபர்களுக்கு மட்டும்தான் பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கும்.

18,000 பட்டதாரி ஆசிரியர்களில் 6,000 நபர்களுக்கு மட்டும்தான் நடுநிலைப்பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கும்.

இதன்மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் குறந்தபட்சம் ஒரு பதவி உயர்வாவது கிடைக்கும்..மிகவும் இளையோர் எனில் அனைத்துநிலை பதவி உயர்வுமே கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த பதவி உயர்வுகள் மாநில அளவிலான முன்னுரிமைப்படி வழங்கப்பட உள்ளது. இது ஏதோ தொடக்கக்கல்வித் துறையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர்.பள்ளிக்கல்வித்துறையில் நடைமுறையில்தான் இருக்கின்றது.

இதை ஏன் இப்போது நடைமுறைப் படுத்துகின்றனர்?

நீதிமன்றத்தீர்ப்பு தீர்ப்பின் அடிப்படையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு இதன் சாதகங்கள் , பணியாளர் நலன் ஆகியவற்றை கருத்தில்கொண்டு பழைய முறைகளில் இருக்கும் குறைபாடுகளையும் சமத்துவமில்லா நடைமுறையையும் களையவே அனைவருக்குமான சமமான பரந்துபட்டா வாய்ப்பாக இதை இப்போது நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர்

எப்படி என்றால் முன்னுரிமை என்பது ஒன்றிய அலகாக இருக்கும்போது ஒரே நாளில் வெவ்வேறு ஒன்றியங்களில் பணிநியமனம் பெறும் நிலையில் அந்தந்த ஒன்றிய நிலைமைக்கேற்ப பதவி உயர்வு பெறுகின்றனர்.

எடுத்துக்காட்டாக 2004 பணிநியமனம் பெற்றவர்கள் ஒருசில ஒன்றியங்களில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரை பெற்றுவிட்டனர்.இதே நாளில் பபணியேற்ற பெரும்பாலானவர்களுக்கு முதல்நிலை பதவி உயர்வு கூட இன்னும் கிடைக்கவில்லை.ஏன் 1988 இல் பணிநியமனம் பெற்ற பலர் ஒரு பதவி உயர்வு பெற்ற நிலையிலேயே பணிபுரிந்து வருவது சரியான நடைமுறை இல்லையே.

இதைத்தான் மாற்றி மாநில அளவில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட்டு மாநில அளவில் காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் வாய்ப்புகள் ஒன்றிய அளவில் மட்டும் சுருங்கிவிடாமல் பரவலாக்கப்பட்டுள்ளது. ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட்டு நியமனநாள் படி காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் மிகச்சரியான மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதை தேன் தடவிய சயனைடு குப்பி என்று விமர்சிப்பது ஏற்புடையதல்லவே.

அடுத்த விமர்சனம் ஒரு இடத்தில் பணிபுரிபவர்கள் பதவி உயர்விற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்கள்.அரசூழியர்கள் அனைவருக்கும் #வீட்டுவாடகைப்படி எதற்கு வழங்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிட்டோமா?

பெண் ஆசிரியைகள் நீண்டதூரம் செல்லவேண்டிகிருக்கும் எனவே அவர்கள் பதவி உயர்வை துறப்பார்கள் என்பதெல்லாம் உண்மையல்ல. காரணம் பல ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறையில் பெண் ஆசிரியைகளும்,பெண் தலைமை ஆசிரியைகளும் நீண்ட தூரம் பயணித்து பலவேறு மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றி முன்னுதாரணமாக விளங்குகின்றனர் என்பது கண்கூடு...

பஞ்சாயத்து யூனியனில் பணிபுரிந்த ஆசிரியர்களை அரசூழியர்களாக மாற்றி ஆணை வழங்கப்பட்ட உடனேயே இன்று நடைமுறைபடுத்தப்பட்ட மாநில அளவிலான முன்னுரிமை என்பதை நடைமுறைப்படுத்தியிருந்தால் முன்னுரிமைகளில் வேறுபாடுகளையும்,ஊதியங்களில் வேறுபாடுகளையும் களைந்திருக்கலாம்.

தொடக்கக்கல்வித்துறையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சரியாக மாற்றம் நிகழ்த்தப்பட்டிருப்பதை வரவேற்போம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.