10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே, எவ்வித கட்டணம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறைச் செயலர் அறிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 23, 2023

10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே, எவ்வித கட்டணம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறைச் செயலர் அறிக்கை!



Students who have lost their 10th, 11th and 12th class mark certificates can get them from the school they attended, without any fees - School Education Secretary Report - கன மழையில் 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே, எவ்வித கட்டணம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைச் செயலர் அறிக்கை!

பள்ளிக் கல்வித் துறை

பத்திரிக்கைச் செய்தி


"கன மழை காரணமான வெள்ளப் பாதிப்பினால் பள்ளிச் சான்றிதழ்களை இழந்த மாணவ/மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களை வழங்குதல்" சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் "மிக் ஜாம்" புயல் காரணமாகவும், தற்போது தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 09.12.2023 நாளிட்ட செய்திக் குறிப்பின்படி" மேற்காண் மாவட்டங்களில் கன மழையின் காரணமாக இழந்த / சேதமடைந்த மதிப்பெண் சான்றிதழ்களின் (10th / 11th / 12th) இரண்டாம்படி நகலினை, மாணவர்கள் நலன் கருதி எவ்வித கட்டணமின்றி வழங்கிட அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் மாவட்டக் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கன மழையில் 10th/ 11th / 12th மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே, இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு எவ்வித கட்டமிண்றி அவர்கள் பயின்ற பள்ளி மூலமாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப.,

அரசுச் செயலர்,

பள்ளிக் கல்வித் துறை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.