பள்ளிகளை மீண்டும் திறத்தல் - அறிவுரை வழங்குதல் தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 20-12-2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 21, 2023

பள்ளிகளை மீண்டும் திறத்தல் - அறிவுரை வழங்குதல் தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 20-12-2023



அதிக மழையின் காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது - இயல்பு நிலை திரும்பிய பின்னர் பள்ளிகளை மீண்டும் திறத்தல் - அறிவுரை வழங்குதல் தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 20-12-2023

Schools closed due to heavy rains - Reopening of schools after normalcy returns - Procedures of Director of Private Schools regarding issuance of advisory, dated : 20-12-2023

தமிழ்நாடு தனியார் பள்ளிஇயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.



நாள். 20.12.2023 பொருள்-

தனியார் பள்ளிகள் இயக்ககம் - திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகப்படியான மழையின் காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது இயல்பு நிலை திரும்பிய பின்னர் அனைத்து வகையான தனியார் பள்ளிகள் திறத்தல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு-

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் அதிகப்படியான மழையின் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 18.12.2023 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கீழ்கண்ட அறிவுரைகளை பின்பற்றுமாறு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ங்களைச் சார்ந்த அனைத்து வகையான தனியார் பள்ளிகளின் முதல்வர்கள்/ தலைமையாசிர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகளின் முதல்வர்கள் / தலைமையாசியர்கள் பள்ளிகளுக்குச் சென்று பள்ளி நிர்வாகத்தின் துணையோடு பள்ளிகள் திறக்க உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி வளாகத்தில் அதிகப்படியான மழையின் காரணமாக தேங்கியுள்ள தண்ணீரை முற்றிலுமாக அகற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள் நூலகம் மற்றும் இதர அறைகளையும் தூய்மைப்படுத்திட வேண்டும். அறையில் இருக்கும் ஓட்டைகளை அகற்றி கரும்பலகைகள் சுத்தம் செய்தல் வேண்டும்.

வகுப்பறைகளில் உள்ள கதவுகள், ஜன்னல்கள், பென்ச் டெஸ்க் போன்றவற்றை சரி செய்து பூஞ்சைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்கள் பள்ளிக்கு வருகைபுரியும் போது பாதுகாப்பான கற்றல் சூழ்நிலை ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் உறுதி செய்தல் வேண்டும்.

பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் முழுவதும் ஆய்வு செய்து கொடிய விஷ ஜந்துகள் இல்லாததை உறுதி செய்தல் அவசியம். பள்ளி மாணவர்களுக்கு போதுமான காற்றோட்டமான சூழ்நிலையினை உருவாக்கித் தரும் பொருட்டு வகுப்பறைகளில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்விசிறி, மின்விளக்கு மற்றும் மின் இணைப்பு ஏதேனும் இருப்பின் அவற்றை பழுது நிக்கி பயன்பாட்டிற்கு எற்ற வகையில் பாதுகாப்பான நிலையில் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும். பள்ளி வளாகம் முழுமையாக தூய்மை செய்தல் வேண்டும். பள்ளி வளாகத்தில் முட்புதர்கள் ஏதேனும் இருப்பின் அவை அப்புறப்படுத்த வேண்டும்.

தொடர் மழையின் காரணமாக பள்ளிச்சுற்றுச் சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்கப்பட வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உடைந்த கண்ணாடிகள், மரக்கிளைகள், தேவையில்லாத பொருட்கள் மற்றும் இடிந்த கட்டிடங்களை அகற்றப்பட வேண்டும்.

கழிவறைகளின் கதவுளைச் சரிசெய்து, தண்ணீர் வசதியுடன் கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும். கழிவறைகளில் ஏதேனும் பழுதுகள் பழுதுகள் இருந்தால் அதனை கூடிய சரிசெய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்திட வேண்டும்.

. கழிவறைகளிக்குச் செல்லும் பாதை சுத்தமாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

விளையாட்டுத் திடலில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி, மேடு பள்ளங்கள் இன்றி சமன்படுத்தி பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் தயார் செய்தல் வேண்டும்.

· பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்வதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

குடிநீர் தொட்டிகள் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைபடுத்தி மாணவர்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும் மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்.

பள்ளிக் கட்டிடங்களின் மேற்கூறைகள் சுத்தம் செய்யப்பட்டு மழைநீர் தேங்காதபடி இருக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

· பள்ளி வளாகத்தில் உள்ள தரைதளத்தல் உள்ள கழிவுநீர் தொட்டிகளின் மூடிகள் திறந்துள்ளனவா என ஆய்வு செய்து பழுதுகள் ஏதேனும் இருப்பின் சரி செய்து பாதுகாப்பாக முடப்பட வேண்டும்.

மின் கம்பிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்களின் எச்சரிக்கை பதாகைகள் அமைத்து மாணவர்கள் அருகில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படவேண்டும்.

சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் மாணவர்கள் நடப்பதை தவிர்க்க ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

பள்ளி வாகனங்களை முழுவதும் முறையாக ஆய்வு செய்தும், இருக்கைகள் சுத்தம் செய்து வாகனம் நல்ல நிலையில் இயங்கிய பின்னரே வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

வாகனத்தை ஆய்வு செய்யாமல் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

பள்ளி வளாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுடைய கூட்டு முயற்சியில் அனைத்து வகையான தனியார் பள்ளிகளும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் மேற்காண் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகையான தனியார் பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/பள்ளி முதல்வர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் சம்பந்தப்பட்ட கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.