பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு அறிவிப்பு - Instructions & Relaxation - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 17, 2023

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு அறிவிப்பு - Instructions & Relaxation - Director Proceedings





அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பார்வை 1 முதல் 7 வரையில் உள்ள அரசாணைகள் பின்பற்றி நடப்புக் கல்வியாண்டில் (2023-24) 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் (BT Staff Fixation) செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளது.

2) இதனைத் தொடர்ந்து மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus Post With Person) பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் 1 கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் (BT Deployment Counselling) மூலம் வருகின்ற 20.11.2023 அன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களுக்கு (Off line Counselling) சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரால் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி நடத்தி முடிக்கப்படவேண்டும் 3)உபரி ஆசிரியர்களை கண்டறிதல் பணியாளர் நிர்ணய அறிக்கையின் மேலும் மேற்படி அடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ள பணியிடங்களை (Surplus Post With person) முதலில் பள்ளி வாரியாக, குறிப்பிட்ட பாடத்தில் அப்பள்ளியில் இறுதியாக பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் Station Junior யார் என்பதை கண்டறிந்து அதன் பின்னர் மாவட்ட அளவில் / பாடவாரியாக தனித்தனியே தொகுத்து அப்பட்டியலில் (பட்டதாரி ஆசிரியராக முதலில் பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேர்ந்த நாள் (அலகு மாறுதல் மூலம்)/ பணிவரன்முறை நாள் அடிப்படையில் ) பள்ளிக் கல்வித்துறையில் பணியில் சேர்ந்த நாளினை கணக்கிற்கொண்டு பணிநிரவல் மாறுதலுக்கான மூத்தோர் பட்டியல் (Subject wise deployment teachers seniority list) தயாரிக்கப்படவேண்டும்

(பார்வை-5ல் காணும் அரசாணை பக்கம் 4 பத்தி II) i) மற்றும் ii)ல் தெரிவித்துள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும்.

4) உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வில் முன்னுரிமை (Priority) மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இருதய, மூளைகட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள்

இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவியர் விதவைகள் / மனைவியைஇழந்தவர்கள்& 40 வயதை கடந்த திருமணம் செய்து கொள்ளாத பெண் பணியாளர்கள் & சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியை 5) பணிநிரவல் விதிவிலக்கு

i) பார்வை-6, 7ல் காணும்

அரசாணையில் 40% கண்பார்வையற்றவர்கள், 40% மாற்றுத்திறனாளிகள் மற்றும் NCC பொறுப்பில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் எவரேனும் உபரியாக கண்டறியப்பட்டு இருப்பின் அவர்களுக்கு விலக்கு அளித்து அவருக்கு பதிலாக அதே பள்ளியில் அதே பாடத்தில் உள்ள அடுத்த இளையவரை (Next station junior) உபரியாக தெரிவு செய்து பணிநிரவலுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

ii) ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus post with person) பட்டதாரி ஆசிரியர் பணிபுரியும் பள்ளியில் உபரி என்று கண்டறியப்பட்ட அவ்வாசிரியர் 31.5.2024ல் பணி ஓய்வு பெறுவதாலும் அல்லது அதேப் பாடத்தில் (Same Subject) பணிபுரியும் மற்றொரு உபரி அல்லாத ஆசிரியர் 31.05.2024 அன்றோடு வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலையில் இருந்தாலும் அப்பள்ளியில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியரை பணிநிரவலுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து அப்பள்ளியிலேயே பணிபுரிய அனுமதித்துவிட்டு 31.5.2024பிப அன்னாரை பணிவிடுப்பு செய்யப்பட்டவுடன் அக்காலிப்பணியிடத்தினை இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு மேற்கொள்ளப்படவேண்டும்.

6) காலிப்பணியிடம் / கூடுதல் தேவையுள்ள பணியிடங்கள் நடவடிக்கை நாளது தேதி வரையுள்ள அனைத்து வகை பாடவாரியான பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்பத் தகுந்த காலிப்பணியிடங்கள் (Eligible Vacancy Post as per fixation) விவரங்களை தயார் செய்திட வேண்டும்.

மேலும் பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி கூடுதல் தேவை (Need) என கண்டறியப்பட்ட பள்ளிகளைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளை மட்டும் (2 பணியிடங்களுக்கு மேல் உள்ள கூடுதல் தேவையுள்ள பள்ளிகள்) முன்னுரிமையின் அடிப்படையில் கலந்தாய்வில் காண்பிக்கப்படவேண்டும்.

மாவட்டத்தில் குறைவான கூடுதல் தேவை (Need) என கண்டறியப்பட்ட பள்ளிகள் இருப்பின் 1 பணியிடம் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளையும் கலந்தாய்வில் காண்பிக்கப்படவேண்டும்.

7) மேலும் ஒரு சில மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உபரி எனக் கண்டறியப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதற்கு போதுமான அளவிற்கு நிரப்பத் தகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவை பள்ளிகள் இல்லாத சூழல் உள்ளதாக அறிய வருகிறது. அவ்வாறான நிலையில் இக்குறிப்பிட்ட பாடத்தில் உள்ள காலிப்பணியிடம் / கூடுதல் தேவை பணியிடங்களுக்கு ஏற்றவாறு உபரிப் பட்டதாரி

ஆசிரியர்களை (அக்குறிப்பிட்ட பாடத்தில் மாவட்ட அளவில் உள்ள ஒட்டு மொத்த பட்டியலில் பணியில் இளையவர்களை) மட்டுமே பணிநிரவல் கலந்தாய்விற்கு உட்படுத்தப்படவேண்டும்.

உதாரணம்:

i) ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்

ii) அக்குறிப்பிட்ட பாடத்தில் நிரப்பத் தகுந்த காலிப் பணியிடம் உள்ளவை

iii) அக்குறிப்பிட்ட பாடத்தில் கூடுதல் பணியிடங்கள் உள்ளவை

iv)ஆக மொத்தம் (Vacant + Need) 20 08 03 11

8) மேற்காண் 20 உபரி பட்டதாரி ஆசிரியர்களின் பணிவரன்முறை நாளின் அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள தயார் செய்யப்பட்டுள்ள ஒட்டு மொத்த மாவட்ட அளவிலான முன்னுரிமைப் பட்டியலின் (Seniority list) அடிப்படையில் வ.எண்.1 முதல் 9 வரையுள்ள மூத்த பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவலுக்கு உட்படுத்தாமல் வ.எண்.10 முதல் 20 வரையுள்ள உபரிப் பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவலுக்கு உட்படுத்தப்படவேண்டும். 9) மேலும் பணிநிரவலுக்கு உட்படுத்தாமல் உள்ள மூத்த பட்டதாரி ஆசிரியர்களை அதேப் பள்ளியில் (உபரி பணியிடத்தில் பணிபுரியும் பள்ளி) தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்காமல்

i) தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளவர்களின் பணியிடங்கள்,

ii) மகப்பேறு விடுப்பு,

iii) நீண்டகால விடுப்பில் உள்ள பணியிடங்கள், மற்றும்

iv) தேவையின் அடிப்படையில் உள்ள பணியிடங்களில் இவ்வாசிரியர்களை மாற்றுப்பணி மூலம் பணிபுரிய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

10) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வில் தவறாது கலந்து கொள்ள ஏதுவாக உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே கலந்தாய்வு நடைபெறும் நாள், இடம், நேரம் ஆகியவற்றினை தெரிவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

11) பணிநிரவல் கலந்தாய்வு முடிவுற்ற பிறகு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் அன்று மாலைக்குள் உரிய விவரங்களை c3supdtdsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலினை விரைவு அஞ்சலிலும் அனுப்பிவைக்குமாறும், மேலும் கூடுதல் தேவைப் பள்ளிகளுக்கு பணிநிரவலில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அப்பணியிடத்தினை IFHRMSல் உள்ளீடு செய்வதற்கு ஏதுவாக அவர்கள் சார்பான விவரங்களையும் இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் உடனடியாக அனுப்பிவைத்திட வேண்டும்.

12) மேலும் மேற்படி அறிவுரைகளை பின்பற்றி பணிநிரவல் கலந்தாய்விற்கு தேவையான கணினி வசதிகள், வசதிகள், மின்சார வசதி, இதர முன்னேற்பாடுகளை செய்திடுமாறும், இதில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023ல் உள்ளபடி 6 முதல் 10 வகுப்புகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டதில் ஆசிரியருடன் உபரி பணியிடங்கள் கண்டறியப்பட்டன.

பார்வையிற் காண் அரசாணை மற்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி உபரி பணியிடத்தில் (Surplus Post With Person) பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியரை கீழ்க்கண்டுள்ளவாறு கூடுதல் தேவையுள்ள / நிரப்பத் தகுந்த காலியாகவுள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடத்துடன் / ஆசிரியர் மட்டும் கலந்தாய்வு மூலம் பணிநிரவல் செய்து (Deployment) ஆணை வழங்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியரை உடன் பணியில் சேரும் வகையில் பணியிலிருந்து விடுவிக்குமாறும், கூடுதல் தேவை உள்ள (Need) பள்ளிக்கு பணிநிரவல் செய்யப்பட்டால் அன்னாரது உபரி பணியிடம் எந்த அரசாணையின்படி ஏற்படுத்தப்பட்டது என்பது குறித்த விபரத்தினை மாறுதல் பெற்றுள்ள பள்ளிக்கு தெரிவிக்குமாறும், பணியிலிருந்து விடுவித்த மற்றும் பணியில் சேர்ந்த விபரங்களை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்குமாறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிநிரவல் ஆணையினை இரத்து செய்யவோ, மாற்றம் செய்யவோ இயலாது எனத் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.

மேற்படி உபரிப் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது மற்றும் கூடுதல் பணியிடம் வழங்கப்பட்டது சார்ந்து, மேற்படி இரு பள்ளிகளிலும் பராமரித்து வரும் அளவைப் பதிவேடு (Scale Register) EMIS இணையதள Teacher Profile மற்றும் இதர ஆவணங்களில் உரிய பதிவுகளை மேற்கொள்ளத் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD Instructions & Relaxation - Director Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.