பள்ளி கல்வித் துறையை பரபரப்புத் துறை என்றழைக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 2, 2023

பள்ளி கல்வித் துறையை பரபரப்புத் துறை என்றழைக்கலாம்



The school education sector can be called a busy sector - பள்ளி கல்வித் துறையை பரபரப்புத் துறை என்றழைக்கலாம்

இன்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் படும் துன்ப துயரங்கள் பற்றிய செய்திகளை வாசிக்கும் போது "வாத்தியாரம்மாஸ்" என்று ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் நூற்றாண்டு கண்ட சிறுகதை இலக்கிய முன்னோடி கு.அழகிரிசாமி எழுதியது. ஒரு அமைச்சர் மாவட்ட ஆட்சியர் ஒருவரை ஒருமையில் அழைத்து திட்டியது, முதன்மைக் கல்வி அலுவலர் ஒருவர் தனக்குக் கீழ் பணிபுரியும் ஒரு பெண் வட்டார கல்வி அலுவலரை ஒருமையில் பேசி, அதற்கு எதிராக அந்த பெண் அலுவலர் இரவு வரை தர்ணா செய்தது, ஒரு பெண் தலைமை ஆசிரியர் பணி புரியும் பள்ளியில், பணி நேரம் கடந்தும் பார்வையிடுகிறேன் என்று வேண்டுமென்றே கால தாமதம் செய்த ஒரு அலுவலரை அந்த பெண் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு உள்ளேயே வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு கிளம்பிய காணொளி, எமிஸ் வழியே குழந்தைகளுக்கு தேர்வுகளை நடத்தி முடித்த பிறகு பார்த்தால், அந்த பதிவுகளை காணவில்லை என்கிற அதிர்ச்சியில் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே உயிர் பிரித்ததாக பரவிய தகவல்கள் என இவை அனைத்தும் அரசுப் பணி என்றால் ஒரு நெருக்கடிக்கு உள்ளேயே இருந்துதான் ஆக வேண்டும் என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குகின்ற வகையில் வந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் கடலூர் மேயர் பேசியது என ஒரு காணொளி பரவி வருகிறது. ஆண்கள், பெண்கள் என பலரும் சூழ்ந்திருக்க, பெண் ஆசிரியரைப் பார்த்து அந்த மேயர் கேட்கிறார், “ஊர்ல உனக்கு மட்டும் தான் பீரியட்ஸ் வருதா?" அத்தோடு விடவில்லை. “ஏன் இங்கெல்லாம் பாத்ரூம் இல்லையா? நான் வர்ற நேரத்தில்தான் நீ வீட்டுக்குப் போயி பேட் வைக்கணுமா?!" என நாப்கின் வைப்பது வரை நாக்கூசாமல் பேசுகிறார்.

“பொதுவாக மாதவிலக்கு குறித்து பேச யாரும் தயங்க வேண்டியதில்லை. பெண்கள் தனக்குத் தானே அதை நினைத்து கூச்சப்பட வேண்டியதில்லை. அது இயல்பான ஒன்று. அதை மறைக்க வேண்டியதில்லை. தயங்க வேண்டியதில்லை" என்று பேசுகிறோம் தான். ஆனால் அது இந்த மேயர் பேசுகிற நோக்கத்திலும் தொனியிலும் அல்ல. நான்கு பெண்கள் சூழ நிற்கையில் சட்டை விலகியதை கூட சைகையில் வெளிப்படுத்தும் பழக்கம் உடையவர்கள் நம் பெண்கள். அவர்களை இவ்வளவு வன்மத்துடன் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது??” அதிகாரி, உயர் பொறுப்பு என வந்து விட்ட பிறகு ஆணென்ன பெண்ணென்ன என்கிற அளவுக்கு இருந்தது அவர் பேச்சு..

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பள்ளி கல்வித்துறை பரபரப்புத்துறை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.