South Indian Science Drama Festival - தென்னிந்திய அறிவியல் நாடக விழா நவம்பர் 23 மற்றும் 24 இல் நடைபெறுதல் - மாநில அளவிலான அறிவியல் நாடக விழா போட்டிகள் நடத்துதல் - சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 10, 2023

South Indian Science Drama Festival - தென்னிந்திய அறிவியல் நாடக விழா நவம்பர் 23 மற்றும் 24 இல் நடைபெறுதல் - மாநில அளவிலான அறிவியல் நாடக விழா போட்டிகள் நடத்துதல் - சார்பு



South Indian Science Drama Festival to be held on 23rd and 24th November - Conduct of State Level Science Drama Festival Competitions - Pro

பள்ளிக் கல்வி தென்னிந்திய அறிவியல் நாடக விழா பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியத்தில் 2023 நவம்பர் 23 மற்றும் 24 இல் நடைபெறுதல் - மாநில அளவிலான அறிவியல் நாடக விழா போட்டிகள் நடத்துதல் - சார்பு.

பார்வை:

1. GlGOT 600601-6, பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.45461/எம்/இ2/2023. நாள்.10.10.2023

2.பெங்களூர், விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியக மின்னஞ்சல் . மேற்கண்ட பொருள் சார்பாக பார்வை 1 இல் காணும் செயல்முறைகளில்,

31.10.2023-க்குள் மாவட்ட அளவிலான அறிவியல் நாடகப் போட்டியினை நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்போது, மாநில அளவிலான அறிவியல் நாடகப் போட்டியினை நடத்திட சென்னை மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் நலன்கருதி ஒலி, ஒளி மற்றும் இணையதள வசதியுடன் கூடிய திட்டமிடப்பட்டுள்ளது.

முறையாக இணையதள வாயிலாக நடத்திட மாவட்ட அளவில் (முதல் பரிசு) வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான அறிவியல் நாடகப் போட்டிகளில் இணையவழியில் கலந்து கொள்ள வேண்டும். மாநில அளவிலான அறிவியல் நாடகப் போட்டி நடைபெறும் நாள் சென்னை மாவட்ட கல்வி அலுவலரால் அனைத்து மாவட்டங்களுக்கும் தெரியப்படுத்தப்படும்.

இத்துடன், மாநில அளவிலான போட்டிக்கான சிறப்பு வழிமுறைகள் இணைத்து அனுப்பப்படுகின்றது. அதன் அடிப்படையில், இப்போட்டியினை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்திட சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணையதள வாயிலான மாநில அறிவியல் நாடகப் போட்டியினை 16.11.2023க்குள் நடத்தி மாநில அளவிலான போட்டியில் முதல் இடத்தை பிடிக்கும் மாணவ/மாணவியர்கள் பெங்களூர், விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடகப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.