The Government of Tamil Nadu has issued an ordinance increasing the ration for school students from ₹1,000 to ₹1,400 and the ration for college students from ₹1,100 to ₹1,500. - பள்ளி மாணவர்களுக்கான உணவுத்தொகை ₹1,000-ல் இருந்து ₹1400-ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை ₹1,100-ல் இருந்து ₹1,500-ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான உணவுத்தொகை ₹1,000-ல் இருந்து ₹1400-ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை ₹1,100-ல் இருந்து ₹1,500-ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - விடுதிகள் - ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கருக்கான உணவுத் தொகை - 1,000 ரூபாயிலிருந்து 1,400 ரூபாயாகவும், கல்லூரி மாணாக்கருக்கான உணவுத் தொகை - 1,100 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்குதல் ஆணை - வெளியிடப்படுகிறது.*
ஆணை:-
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கருக்கான உணவுத் தொகை 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், கல்லூரி மாணாக்கருக்கான உணவுத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.
2 மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 04.10.2023 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மாநாட்டு கூட்டத்தில் கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்கள்:-
“முதலாவதாக, அரசுப் பள்ளி மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவிகளுக்குத் தற்போது மாணவர் ஒருவருக்கு மாதந்தோறும் உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஆயிரத்து நானூறாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், அரசுக் கல்லூரி மாணவ / மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயிலுவோருக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூபாய் ஆயிரத்து நூறு என்பது இனி ஆயிரத்து ஐநூறு ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 1,71,844 மாணவ / மாணவியர் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு 68 கோடியே 77 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதனை கல்விக்காக செய்யும் ஒரு முதலீடு என்று கருதியே இந்த அரசு இதனை மேற்கொள்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்."
3. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 2023-2024 ஆம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் உணவுக் கட்டணத்தை ரூ. 1000/. லிருந்து ரூ.1400/. ஆகவும், அதேபோல் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் உணவுக் கட்டணத்தை ரூ. 1100/- லிருந்து ரூ.1500/- ஆகவும் உயர்த்தி வழங்க நிருவாக ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.