இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" - ஒத்திவைக்கப்பட்ட கருத்து கேட்பு கூட்டம் 5 ஆசிரிய சங்கங்களுடன் வரும் 08.11.2023 தேதி நடைபெறும் - DEE PROCEEDINGS - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 2, 2023

இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" - ஒத்திவைக்கப்பட்ட கருத்து கேட்பு கூட்டம் 5 ஆசிரிய சங்கங்களுடன் வரும் 08.11.2023 தேதி நடைபெறும் - DEE PROCEEDINGS



இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" - ஒத்திவைக்கப்பட்ட கருத்து கேட்பு கூட்டம் 5 ஆசிரிய சங்கங்களுடன் வரும் 08.11.2023 தேதி நடைபெறும் - DEE PROCEEDINGS

SSTA-01.06.2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்குவது குறித்து ஒத்திவைக்கப்பட்ட கருத்து கேட்பு கூட்டம் 5 ஆசிரிய சங்கங்களுடன் வரும் 08.11.2023 அன்று பிற்பகல் 4-மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண்.35372/இ1/2022, நாள்.01.11.2023

பொருள்:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பான ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக 08.11.2023 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துதல் - சார்ந்து. பார்வை:

1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 01:012023 நாளிட்ட செய்தி வெளியீடு.

2. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் கடிதம் ந.க.எண்.35372/இ1/2022, நாள்.23.01.2023

3. அரசாணை (நிலை) எண்.25 பள்ளிக் கல்வி (தொ.க.3(1) துறை நாள்.30.01.2023,

4 . அரசுக்கடித எண்.730/தொ.க.3(1)/2023-3, நாள்.01.06.2023

5. அரசுக் கடித எண்.730/தொக.3(1)/2023-5,நாள்:18:10.2023,

6. Glor moor-600 006, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண்.35372/இ1/2022, நாள்.26.10.2023,

7. அரசுக் கடித எண்.730/தொ.க.3(1)/2023-6, நாள்.30.10.2023

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கை சார்பாக ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்து பார்வை 3-ல் கண்டுள்ளவாறு அரசாணை வெளியிடப்பட்டது.

பார்வை 3-ல் காணும் அரசாணையின்படி சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக மேற்கண்டுள்ள குழுவின் தலைவரான அரசு நிதித் துறை செயலாளர் (செலவினம்) அவர்கள் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் முன்னிலையில் பார்வை 6-ல் காணும் அரசுக் கடிதத்தின்படி 08.11.2023 அன்று பிற்பகல் 04,00 மணியளவில் கீழ்காணும் அட்டவணையின்படி நடைபெறவுள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஐந்து சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்திற்கு ஒரு சங்கத்திற்கு இரண்டு பிரதிநிதிகளுக்கு மிகாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.