பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயார் நிலையில் வைத்து கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 16, 2023

பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயார் நிலையில் வைத்து கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்



Director of Elementary Education instructs to keep ready priority list for promotion - பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயார் நிலையில் வைத்து கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்?

அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களும் பதவி உயர்வுகளுக்கு தகுதியானோர் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயார் நிலையில் வைத்து கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கும் அறிவுறுத்தல் என தகவல்.

மாநில TGTA

தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்


தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலக தகவல்

வரும் 20.11 .2023 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வருகிறது.

அன்றைய தினம் அனைத்து விதமான பதவி உயர்வுகளுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை என்கிற உத்தரவினை பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் முயற்சி எடுத்து வருகிறார்.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடை ஆணை கிடைக்குமானால் உடனடியாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகளையும் மாறுதல்களையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகவே அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களும் தகுதியானோர் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.