Youth & Eco மன்றங்கள் - கல்வி சாரா மன்ற செயல்பாடுகள்- போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்கள் விவரங்கள் EMISல் பதிவேற்றம் செய்தல் - சார்ந்து - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 7, 2023

Youth & Eco மன்றங்கள் - கல்வி சாரா மன்ற செயல்பாடுகள்- போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்கள் விவரங்கள் EMISல் பதிவேற்றம் செய்தல் - சார்ந்து - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

Youth & Eco Forums - Non-academic Forum Activities - Uploading details of students and winners participating in competitions to EMIS - Dependent - State Program Director Processes - YOUTH & ECO CLUB செயல்பாடுகளை EMIS-ல் பதிவேற்றம் செய்ய ஒவ்வொரு மாதமும் கடைசி தேதி அறிவிப்பு மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி Youth & Eco மன்றங்கள் - கல்வி சாரா மன்ற செயல்பாடுகள்- போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்கள் விவரங்கள் EMISல் பதிவேற்றம் செய்தல் - சார்ந்து.

1. ந.க.எண்.:019528/எம்/இ1/2022, நாள்:26.07.2023, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.

2. இவ்வலுவலக கடிதம் ந.க.எண்: 3437/ ஆ3/ CLUB/ஒபக/2023, நாள்; 04.09.2023

பார்வை (1) மற்றும் (2)ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் இவ்வாண்டு மன்ற செயல்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் அதன் தொடர்பாக ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டிகளில் நடைபெற்ற போட்டிகளுக்கு செலவினம் மேற்கொள்ளுதல் சார்ந்தும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

(அ) இதன் தொடர்ச்சியாக தற்போது ஜுன்-2023, ஜூலை-2023 மற்றும் ஆகஸ்டு-2023 மாதத்தில் நடைப்பெற்ற பள்ளி அளவிலான போட்டிகள் மற்றும் ஆகஸ்டு-2023 மாதத்தில் வட்டார அளவில் நடைபெற்ற இப்போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்களின் விவரங்கள் EMIS- தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.


இப்பதிவேற்றம் செய்யும் பணியினை 10.10.2023க்குள் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக முடிக்கப்பட வேண்டும்.. மேலும் செப்டம்பர்-2023 மற்றும் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள மன்ற செயல்பாடுகளில் இதேபோன்று போட்டிகளில் பங்கு பெறும் மானவர்களின் விவரங்களை கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு அனைத்து மாவட்டங்களில் முடித்திட வேண்டும்.

குறிப்பு:

மேற் குறிப்பிடப்படுள்ள EMIS பதிவு கடைசி நாளுக்கு பின்னர், EMIS உள்நுழைவுகள் முடக்கப்படும்.

பின்னர் விவரங்கள் பதிவேற்றம் செய்திட இயலாது என்கின்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

(ஆ) மன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்றல் குறித்து கூடுதல் விவரங்கள் பின்வருமாறு வழங்கப்படுகிறது.

1. பள்ளி அளவில் நடைபெறும் மன்ற செயல்பாடுகளில், மாணவர்கள் அனைத்து மன்றங்களின் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கலாம்.

2. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் 10 போட்டிகளில், 10 வெவ்வேறு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு தரும் வகையில், ஒரு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் அடுத்த மாதத்தில் வேறொரு போட்டியில் பங்கேற்க வேண்டும். 3. ஒரு மாணவர் வட்டார அளவில் வெற்றி பெறும் நிலையில், அடுத்த பருவத்தில் வேறொரு மன்ற போட்டியில் மட்டுமே பங்கேற்கலாம்.

4. பள்ளி அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்று, EMISல் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்கள் மட்டும் வட்டார அளவில் பங்கேற்க வேண்டும். வெற்றி பெற்ற மாணவர்களை தவிர்த்து வேறு மாணவர்கள் வட்டார போட்டிகளில் பங்கேற்க கூடாது.

5. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் வட்டார போட்டியில் பங்கேற்க இயலவில்லை எனில் EMIS-ல் ABSENT என்று குறிக்க வேண்டும்.

6. வட்டார அளவில் போட்டிகள் நடைபெறும் நிலையில் எக்காரணத்தை கொண்டும் EMIS-ல் பள்ளி அளவிலான விவரங்களில் மாற்றம் செய்ய இயலாது என்பது தெரிவிக்கப்படுகிறது. எனவே பள்ளி அளவில் விவரங்கள் எவ்வித பிழையும் இன்றி சரியாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

எனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் ஜுன்-2023, ஜூலை-2023 மற்றும் ஆகஸ்டு-2023 மாதத்தில் நடைப்பெற்ற பள்ளி அளவிலான போட்டிகள் மற்றும் ஆகஸ்டு-2023 மாதத்தில் வட்டார அளவில் நடைபெற்ற இப்போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்களின் விவரங்கள் EMIS- தளத்தில் 10.10.2023க்குள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிற மாதங்களில் நடைபெற உள்ள போட்டிகளின் விவரங்களையும் மேற்காண் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் நிறைவேற்றிட அனைத்து ஒன்றிய வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.