மாணவிகள் எதிர்ப்பு - தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 7, 2023

மாணவிகள் எதிர்ப்பு - தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்



மாணவிகள் எதிர்ப்பு - தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் Students Protest - Transfer of Headmaster

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் கோட்டை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் பள்ளியில் உள்ள கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், குடிநீர் தொட்டியின் மீது மேல் மூடி போடப்படாமல் இருப்பதால், அதில் குப்பை கூலங்கள் மற்றும் புழுக்கள் இருப்பதாகவும் கூறி மாணவிகள் கடந்த இரண்டு தினங்களாக எதிர்ப்பு தெரிவித்து பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணியிடம் புகார் தெரிவித்து வந்தனர்.

அப்போது சில மாணவிகள் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு மாணவிகளை தலைமை ஆசிரியர் தமிழ் வாணி கண்டித்ததோடு, தனது அறையில் முட்டி போட வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், இன்று காலை 9 மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென பள்ளி வளாகத்தில் அமர்ந்து வகுப்பறைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கழிவறையை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் சுத்தமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தற்போது பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.