டிட்டோ ஜாக் அமைப்பினர் பேச்சுவார்த்தை - அன்பில் மகேஷ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 11, 2023

டிட்டோ ஜாக் அமைப்பினர் பேச்சுவார்த்தை - அன்பில் மகேஷ்

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் NEET, JEE ஆகிய போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதில் ₹4.27 கோடி செலவினத்தைத் தவிர்த்திருக்கலாம் எனவும் 385 பயிற்சி மையங்களுக்கு தலா ₹55,000 செலவில் வாங்கப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள் 2018, 19 ஆகிய ஆண்டுகளில் 103 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டு.

₹3.18 கோடி மதிப்பில் மாணவர்களுக்கு வழங்கிய வழிகாட்டி புத்தகமும் பயன்படுத்தாததால், ₹2.15 கோடி செலவில் வழிகாட்டி புத்தகங்கள் மறுகொள்முதல் செய்யப்பட்டுள்ளது-அமைச்சர் அன்பில் மகேஸ்.

ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை"

ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் முரண்பாடுகள் உள்ளதால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை; ஆசிரியர்களுடன்

பேச்சுவார்த்தை நடத்த எனது இல்லக்கதவுகள் திறந்தே இருக்கும்

2018-19ம் ஆண்டுகளில் நீட் பயிற்சி வகுப்புகள் சரியாக நடத்தவில்லை; நீட் பயிற்சி சரியாக நடத்தாததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது; திட்டமிடல் இல்லாமல் 150 நாட்களுக்கு குறைவாகவே நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி


டிட்டோ ஜாக் அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் - அன்பில் மகேஷ்

ஆசிரியர் சங்கங்களை அன்பில் மகேஷ் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் சார்பில் நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது . இதனையடுத்து.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஆசிரியர்கள் வரவில்லை. இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள அவர் , டிட்டோ ஜாக் அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.