ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்: மேலும் ஒரு சங்கம் பங்கேற்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 2, 2023

ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்: மேலும் ஒரு சங்கம் பங்கேற்பு

ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்: மேலும் ஒரு சங்கம் பங்கேற்பு

மயக்கமடைந்த, 99 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே வளாகத்தில் தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, இன்று முதல் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., வளாகம், ஆசிரியர்களின் போராட்ட களமாக மாறி உள்ளது. இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.மூன்று சங்கத்தினரும், மழையையும் பொருட்படுத்தாமல், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் உண்ணாவிரதமிருந்த பலர் மயக்கம் அடைந்தனர். நேற்று, 35 பேர் மயக்கமடைந்தனர். மொத்தம், 99 பேர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அப்பகுதியில் ஆம்பு லன்ஸ் வாகனங்கள், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, இப்போராட்டத்தை துவக்குவதாக, கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை போராடும் நிலைக்கு தள்ளுவது, அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானம். கிட்டத்தட்ட, 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னும், தமிழக அரசு திரும்பிக் கூட பார்க்கவில்லை.

எனவே, இனியும் தாமதிக்காமல், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் பேச்சு நடத்த வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.