பகுதி நேர ஆசிரியர்களுக்கு 12,500 ஆக சம்பளம் உயர்வு" - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 3, 2023

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 12,500 ஆக சம்பளம் உயர்வு"

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி!

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர் கொண்ட அந்த குழு 3 மாதத்தில் அறிக்கையை அளிக்கும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 வழங்கப்படும். ரூ.10 லட்சத்தில் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்

தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவர். போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 12,500 ஆக சம்பளம் உயர்வு"

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 10ஆயிரத்தில் இருந்து 12,500 ஆக ஊதியம் உயர்த்தப்படும்

10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளது. 3 மாதத்தில் ஆய்வு செய்து மூவர் குழு அரசிடம் அறிக்கை அளிக்கும். பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம் வழங்கப்படும். போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.