மாணவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ. 25,000 வரை கல்வி உதவித் தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 6, 2023

மாணவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ. 25,000 வரை கல்வி உதவித் தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2023



மாணவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ. 25,000 வரை கல்வி உதவித் தொகை.! எப்படி விண்ணப்பிப்பது.? முழு விவரம்

2023-2024 ஆம் ஆண்டிற்கான பீடி / சுண்ணாம்புக்கல் / டோலமைட் சுரங்கங்கள் / திரைப்படத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், குழந்தைகள், 2023-2024 ஆம் நிதி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ. 1000 முதல் ரூ. 25,000 வரை, கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை, சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.

மேலும் விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும். வகுப்பு ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.11.2023. மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.12.2023

மேலும் விவரங்கள் பெற அணுக வேண்டிய முகவரி :

மத்திய நல ஆணையர் அலுவலகம்,
தொழிலாளர் நல அமைப்பு,
தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம்,
திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி,
சென்னை - 600032.

மின்னஞ்சல் - wclwo.chn-mole@gov.in

தொலைபேசி எண்: 044-29530169 ஆகும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.