நிலுவையில் உள்ள RTI மேல்முறையீட்டு மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 5, 2023

நிலுவையில் உள்ள RTI மேல்முறையீட்டு மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!!



நிலுவையில் உள்ள RTI மேல்முறையீட்டு மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!!

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணைய தலைவர் அவர்களால் 22.08.2023 அன்று தகவல் உரிமைச் சட்டம் (2005) சார்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அளிக்கப்பட்ட பார்வை 1-இல் காணும் மாநில தகவல் ஆணைய கடிதத்தில் இணைப்பில் குறிப்பிடப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் (1566) நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (நகல் இணைக்கப்பட்டுள்ளது) மாநில தகவல் ஆணைய கடிதத்தில் குறிப்பிட்ட நிலுவையில் உள்ள Second Appeals (SA), Non-Complaince Case(N.C) & Complaints Petitions (C.P) மீது உரிய தொடர் நடவடிக்கை மேற்கொண்டு 15.09.2023க்குள் முடித்த அறிக்கையினை; உரிய பதிலளிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே காலதாமதமாகி விட்ட நிலையில் இனியாவது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் துரிதமாக காலதாமதமின்றி நிலுவையிலுள்ள தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அலுவலகத்திலிருந்து பெற்று மாநில தகவல் ஆணையத்திற்கும், சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட நபருக்கும் தகவல்களை அனுப்பிடுதலை உறுதி செய்திட வேண்டும். மேலும் இவ்வலுவலக மின்னஞ்சல் dseddrti@gmail.com முகவரிக்கு நகல் ஒன்றினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாநில தகவல் ஆணையத்தில் பெறப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Second Appeals (SA), Non-Complaince Case(N.C) & Complaints Petitions (C.P) வழக்கு எண் (Case No) தவறாமல் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது சார்ந்த நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது தண்டனைக் கட்டணம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தகவல் ஆணையரால் 22.08.2023 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தல் எச்சரிக்கப்பட்டுள்ளது. மாநில தகவல் ஆணையர் அலுவலகத்தில் தகவல்கள் ஏதேனும் தேவைப்பட்டால் உதவி தொடர்பு அதிகாரி (ASO) திரு.ஜெயக்குமார் அலைபேசி எண்.8610945002 தொடர்பு கொண்டோ (அல்லது) நேரில் அலுவலர்களை அனுப்பியோ பெற்றுக் கொள்ளலாம். எனவே, இதனை மிகவும் அவசரமாக கருதி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.