சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு - TNPSC கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு - நான்கு மாதத்தில் பணிகளை முடிக்க அறிவுறுத்தல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 26, 2023

சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு - TNPSC கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு - நான்கு மாதத்தில் பணிகளை முடிக்க அறிவுறுத்தல்!



Promotion on seniority basis - Supreme Court accepts TNPSC request - Instructions to complete work in four months! - சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு - TNPSC கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு - நான்கு மாதத்தில் பணிகளை முடிக்க அறிவுறுத்தல்!

சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு டி.என்.பி.எஸ்.சி கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு ' நான்கு மாதத்தில் பணிகளை முடிக்க அறிவுறுத்தல்... மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஜனவரி முதல் வாரத்திற்குள் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் போட்டித் தேர்வின் அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்படும் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘டி.என்.பி.எஸ்.யில் மதிப்பெண் மற்றும் பணி மூப்பு தகுதியின் அடிப்படையில் தான் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து மேற்கண்ட உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை எனக்கூறி மனுதாரர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் குமணன், ‘‘இந்த விவகாரத்தில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. இதில் மூன்று வகையான சீனியாரிட்டி பிரிவின் அடிப்படையில் அதாவது 54 துறைகளில் ஆய்வு செய்யப்படுகிறது.மேலும் இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் இரண்டு பேர் மட்டும் தான் முதலில் உயர்நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் தற்போது குறிப்பிட்ட காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளாதால் அதனை நடைமுறைப்படுத்த அனைத்து பணிகளும் மீண்டும் திருத்தி மேற்கொள்ளப்படுகிறது. அதனால் கூடுதலாக 6 மாதம் கால அவகாசம் வேண்டும்’’ என தெரிவித்தனர்.இதையடுத்து இந்த விவகாரத்தில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி (பணி மூப்பு) முறையில் பதவி உயர்வு வழங்கும் பணியை ஜனவரி முதல் வாரத்திற்குள் அனைத்து நடவடிக்கை பணிகளையும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் எடுக்க வேண்டும். மேலும் அதுகுறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

CLICK HERE TO DOWNLOAD TNPSC கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.