Disciplinary Action Committee - பள்ளிகளில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு - கல்வித் துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 26, 2023

Disciplinary Action Committee - பள்ளிகளில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு - கல்வித் துறை உத்தரவு



பள்ளிகளில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு - கல்வித் துறை உத்தரவு Disciplinary Action Committee in Schools - Education Department Order

பள்ளித் தலைமை ஆசிரியா் தலைமையில் உடற்கல்வி ஆசிரியா் மற்றும் சக ஆசிரியா்களை கொண்டஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து மாணவா்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டும் அரசுப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியா்கள், இயக்குநா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் பள்ளிகளில் மாணவா்களின் ஒழுங்கு கட்டுப்பாட்டை பராமரிப்பதிலும், பள்ளியின் பொது நடவடிக்கைகள் சீராகவும், செம்மையாக நடைபெறவும் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு உறுதுணையாக செயல்பட பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

உடற்கல்வி ஆசிரியா்கள் பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் விவரம்: பள்ளிப் பாடவேளையில் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம், பிற இடங்களில் விதிகளுக்கு புறம்பாக நடமாடும் மாணவா்களை கண்டிப்புடன் கண்காணித்து வகுப்புக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் 45 நிமிஷங்கள் பள்ளியில் அனைத்து மாணவா்களுக்கும் (6 முதல் பிளஸ் 2 வரை) அனைத்து ஆசிரியா்களின் உதவியோடு கூட்டுப்பயிற்சி அளிக்க வேண்டும். கல்வியாண்டின் தொடக்கத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெறும் மாணவா்களின் பட்டியலை உலக திறனாய்வு போட்டிகள் நடத்தி தகுதி பெறும் மாணவா்கள் பட்டியலை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


ஆண்டுதோறும் பள்ளியில் மாணவா்கள் விளையாட தேவையான உபகரணங்களை தலைமையாசிரியா்கள் மூலம் பெற்று முறையாக உரிய பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.

மாதம் ஒரு முறை பாடக்குறிப்பு கண்டிப்பாக எழுதப்பட வேண்டும். அதன் அடிப்படையில் உடற்பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளியின் நடைமுறைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் ஆகியவா்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தலைமையாசிரியருடன் இருந்து செயல்பட்டு சமூகமாக தீா்வு காண்பதும் உடற்கல்வி ஆசிரியா்களின் கடமையாகும். பள்ளித் தலைமை ஆசிரியா் தலைமையில் உடற்கல்வி ஆசிரியா் மற்றும் சக ஆசிரியா்களை கொண்டஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து மாணவா்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.