ஆசிரியர்களின் ஆதரவான, நேர்மறையான, எதிர்மறையான Feedbacks... - TNPTA - தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் விளக்கம் - 09.09.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 9, 2023

ஆசிரியர்களின் ஆதரவான, நேர்மறையான, எதிர்மறையான Feedbacks... - TNPTA - தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் விளக்கம் - 09.09.2023



TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் - 09.09.2023

06.09.2023 அன்று வெளியிட்ட அறிக்கை..... தமிழ்நாட்டு ஆசிரியர்களின் ஆதரவான, நேர்மறையான, எதிர்மறையான Feedbacks... எங்கள் அறிக்கையின் நோக்கங்கள்.... ஒரு விளக்கம்....


TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை 06.09.2023 அன்றைய கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம்.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆசிரியர் நண்பர்கள் தொடர்புகொண்டு எங்கள் அறிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள். இந்த கருத்துக்களை TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வரவேற்கிறது. தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசு வழங்கிய ஆசிரியர்கள் ஊதியத்தை பெறுகின்ற போராட்டத்தில் அனைத்து சங்கங்களும் இணைந்து ஒற்றை கோரிக்கைக்காக போராட வேண்டும் என அனைவரையும் TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அழைக்கிறது. எந்த ஒரு போராடும் அமைப்பையும் கொச்சைப்படுத்தும் எண்ணம் TNPTA- தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்திற்கு கிடையாது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் அறிக்கையை படித்துவிட்டு பேசிய ஆசிரியர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் - பெறுவதற்காக நாங்கள் போராடுகிறோம். எங்களைப் போல் யாரேனும் போராடியது உண்டா? என்று கேட்டார்கள். போராடும் சங்கம் கோரிக்கை என்ன என்பதனை தெளிவாக சொல்ல வேண்டும் என்பதே எங்கள் அறிக்கையின் நோக்கமாகும். தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுகின்றோம்.

போராடும் சங்கம் - நாங்கள் மட்டும்தான் போராடுகிறோம் என்கிற நிலையில் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். - தமிழ்நாட்டில் பழம்பெரும் சங்கங்கள் மாஸ்டர் இராமுன்னி அவர்களால் துவக்கப்பட்ட சங்கங்கள் எல்லாம் பிளவுபட்டு பிளவுபட்டு - பிறகு அனைத்தும் ஓரணியில் நின்று ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்திய பிறகுதான் - 01.01.1987 இல் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை பெற்றோம் என்பதுதான் - ஊதியம் பெற்ற போராட்ட வரலாறு என்பதை போராடுபவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதும் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்கள் பெறும் ஊதியத்தை தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஆசிரியர் அமைப்புகள், டிட்டோஜாக், ஜாக்டோ ஜியோ மற்றும் TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் என அனைத்து அமைப்புகளும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை - தாங்கள் மட்டும் தான் போராடிக் கொண்டிருப்பதாக சொல்ல கூடிய நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தனை ஆண்டு காலம் போராடியும் கூட பல போராட்டங்களை நீதிமன்ற படிக்கட்டுகளில் கொண்டு போய் நிறுத்தியும்கூட தலைமைச் - செயலாளரையே மதுரை நீதிமன்றத்தில் நிறுத்தியும் கூட மத்திய அரசுக்கு - இணையான ஊதியத்தை மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க முடியாது என்று இப்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசே நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்த வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் தேர்தல் வாக்குறுதியாக இடைநிலை ஆசிரியர் ஊதிய வேறுபாடுகளை களைந்திடுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி சொன்னாலும் – திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு அதன்கீழ் பணியாற்றும் கல்வித்துறை அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகள் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடியாது என்று 26.08.2010 அன்று ராஜீவ் ரஞ்சன் ஒரு நபர் குழு அளித்த அறிக்கையை பின்பற்றி 2011இல் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி என்றால் இந்த அரசாங்கத்தை எதிர்த்து வலுவான போராட்டத்தை நடத்துவதன் மூலமாக தான் இந்த கோரிக்கையை வென்றெடுக்க முடியும் என்பதனை மீண்டும் TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

சம வேலைக்கு சம ஊதியம் என்பது - ஒரே கல்வி தகுதி, ஒரே பணி நிலை. ஒரே நாளில் பணியில் சேர்ந்தவர்கள் இவர்களுக்கிடையில் வேறுபாடு ஏற்பட்டால் தான் வழங்க வேண்டும். தாங்கள் மட்டும் தான் போராடுகிறோம் என்று கூறுபவர்கள் - யாரோடு ஒப்பிட்டு, யாரைக் காட்டி. சம வேலைக்கு சாம் ஊதியம் என எந்த ஊதியத்தை கோரிக்கையாக கேட்கிறார்கள் என்பது தெளிவாகப்பட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்றால் தமிழ்நாட்டில் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க முடியுமா? தமிழ்நாட்டில் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையில் வேறுபாடு இருந்தால் தான் அந்த ஊதியத்தை "சமவேலைக்கு சம ஊதியம்" என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் கோரிக்கை வைக்க முடியும்.

1 comment:

  1. இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்குஅரசு என்ன முடிவு செய்துள்ளது சார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.