வணிகவியல் பாடத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் CA தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள ICAI க்கு அனுமதி - DSE செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 15, 2023

வணிகவியல் பாடத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் CA தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள ICAI க்கு அனுமதி - DSE செயல்முறைகள்!



Allow ICAI to conduct awareness campaign on placements and facing CA exams in Commerce – DSE Processes!- வணிகவியல் பாடத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் CA தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள ICAI க்கு அனுமதி - DSE செயல்முறைகள்!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,

பள்ளிக் கல்வி 2023-2024 ஆம் கல்வியாண்டில் ICAI (The Institute of Chartered Accountants of India)-ன் தென்னிந்திய மண்டல நிறுவனம் – பள்ளி மாணவர்களுக்கு வணிகவியல் பாடப்பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் மற்றும் CA தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்து - விழிப்புணர்வு நடவடிக்கைகள் - அனுமதி கோரியமை - சார்பு. பார்வை: Chairman, SIRC of ICAI ன் கடிதம் நாள்.18.08.2023. ICAI (The Institute of Chartered Accountants of India)-ன் தென்னிந்திய மண்டல நிறுவனமானது (SIRC-Southern India Regional Councl) பார்வையில் காணும் தனது கடிதத்தில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளி மாணவர்களுக்கு வணிகவியல் பாடப்பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் மற்றும் CA தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்தும் பள்ளிகளில் மாணவர்களுக்கு

விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதி கோரியுள்ளது.

2023-2024 ஆம் கல்வியாண்டில், இப்பொருள் சார்ந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள, மேற்கண்டுள்ள நிறுவனம் அணுகும்போது பின்வரும் நிபந்தனைகள் அடிப்படையில் தகுந்த ஒத்துழைப்பினை வழங்கிட தொடர்புடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. ஆர்வமும், விருப்பமும் உள்ள மாணவர்களை இந்நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கலாம்.

எந்தவொரு மாணவனையும் இந்நிகழ்வில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது.

2. இந்நிகழ்வு தொடர்பாக மாணவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது. 3. பள்ளியின் அன்றாட கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏதுமின்றி, பள்ளித் தலைமை ஆசிரியர்களின் முன் அனுமதி பெற்று கல்வி இணைச் செயல்பாடுகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பிரிவேளைகளில் விழிப்புணர்வு மன்ற பொறுப்பாசிரியர் முன்னிலையில் மட்டுமே இப்பொருள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.

மேலும், இந்நிறுவனம் மூலம் மேற்கொள்ளக் கூடிய வணிகவியல் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா என்பது குறித்தும், வணிகவியல் கல்வி சார்ந்து கலைத்திட்ட வடிவமைப்பின் நோக்கங்கள் நிறைவேற்றும் வகையில் உள்ளதா என்பது குறித்தும் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் அறிக்கை பெற்று முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு செய்து தனது பின்னூட்டத்துடன் அறிக்கை சமர்ப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.