நாங்குநேரி மாணவர் மோதல் விவகாரம்; சான்றிதழ்களில் நடத்தை குறிப்பிட முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 16, 2023

நாங்குநேரி மாணவர் மோதல் விவகாரம்; சான்றிதழ்களில் நடத்தை குறிப்பிட முடிவு

நாங்குநேரி மாணவர் மோதல் விவகாரம்; சான்றிதழ்களில் நடத்தை குறிப்பிட முடிவு

சென்னை: நாங்குநேரியில் ஜாதிப் பாகுபாட்டில், மாணவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தை தொடர்ந்து, வரும் காலங்களில், மோசமான நடத்தையை, மாணவர் சான்றிதழ்களில் குறிப்பிட, பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில், அரசு உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும், பட்டியலின மாணவர் மற்றும் அவரது தங்கையை, வேறு ஜாதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து, அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
மாநிலம் முழுதும், மாணவர்களிடம் ஜாதி, மத பாகுபாடு ஏற்படாமல், அனைவரும் ஒரே இனத்தவர் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.www.kalviseithiofficial.com

மாணவர் மோதல் விவகாரம் குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சருடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதில், மாணவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்கவும், நல்லொழுக்க வகுப்புகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால விளைவுகள் குறித்து மாணவர்களிடம் புரிய வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

படிக்கும் காலத்தில், சமூக விரோத செயல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களின் சான்றிதழ்களில் மோசமான நடத்தையை குறிப்பிடலாம் எனவும், ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கமிட்டியின் ஆய்வு முடிவில், பரிந்துரை செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.