School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 31, 2023

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2023
       
திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : புலால் மறுத்தல்

குறள் :251

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

விளக்கம்:

தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?.

பழமொழி :

Blood is thicker than water

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.

2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

உங்களை கையாள, உங்கள் மூளையை பயன்படுத்தவும்; மற்றவர்களைக் கையாள, உங்கள் இதயத்தைப் பயன்படுத்தவும்.” – எலினோர் ரூஸ்வெல்ட்

பொது அறிவு :

1. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?

விடை: கல்கத்தா பல்கலைக்கழகம்

2. இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை?

விடை: 1 லட்சத்து 55 ஆயிரம்

English words & meanings :

 Cho-ke - become unable to breathe when something stuck in the throat or you cannot breathe, verb. மூச்சடைக்கப்படுதல், வினைச் சொல். The flowers were choked by the weeds.

ஆரோக்ய வாழ்வு : 

 உளுத்தம் பருப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

நீதிக்கதை

ஒரு கிராமத்தில் மழை இன்மையால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் தண்ணீர் பஞ்சம் போக்க என்ன செய்யலாம் என்று யோசித்து ஊரின் வாலிபர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து இருக்கும் கிணறுகளை ஆழமாக வெட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் படியே நான்கு குழுவினரும் கிணறுகளை ஆழமாகத் தோண்டினர். எனினும், அவற்றில் நீர் சுரப்பதற்கான அறிகுறியே இல்லை. அவர்கள் அனைவரும் களைத்துப் போய் விட்டனர்; நீரைக் காணாது சோர்வும் அடைந்தனர். நேரம் ஆக ஆக அவர்களின் நம்பிக்கை குறையவே, மூன்று குழுவினர் கிணறு தோண்டும் முயற்சியைக் கைவிட்டனர். ஆனால், ஆலன், ஆறுமுகம், முகமது, டேவிட் ஆகிய நால்வரும் முயற்சியைக் கைவிடவில்லை. அவர்கள் மனவுறுதியுடன் தொடர்ந்து தோண்டினர். ஊர்மக்களோ"நீர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

மேலே வந்துவிடுங்கள்; என்று வேண்டினர். அவர்கள்  நால்வரும்  தோண்டிய  கிணற்றில் திடீரென்று நீர் ஊற்று தென்பட்டது. மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அந்த நால்வருக்கும் மக்கள் நன்றி கூறினர். எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்கக் கூடாது என்ற மன உறுதிதான் வெற்றிக்கு வழிவகுத்தது.

இன்றைய செய்திகள்

01.09. 2023

*நிலவின் அதிர்வுகளை பதிவு செய்த விக்ரம் லேண்டர் - இஸ்ரோவின் புது அப்டேட். 

*இந்திய ரயில்வேயின் முதல் பெண் தலைமை நிர்வாகி ஆகிறார் ஜெயவர்மா.

* இனி அக்டோபர் "இந்து பாரம்பரிய" மாதமாக கொண்டாடப்படும்: அமெரிக்க மாநிலத்தில் தீர்மானம்.

* செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை அரசாணை வெளியீடு.

*இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு..5 ஆண்டுகளுக்கு அம்பானி கையில்...

* 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது - பாகிஸ்தான் அணி புதிய சாதனை.

Today's Headlines

* Vikram Lander recorded the vibrations of the Moon - ISRO's new update.

 *Jayavarma becomes the first woman Chief Executive of Indian Railways.

 * October to be observed as "Hindu heritage" month from now on: Resolution in US state.

 * Vinayagar Chaturthi Holiday Ordinance on 18th September GO released.

 * Broadcasting of Indian team's cricket matches..5 years in Ambani's hands...

 * Pakistan beat Nepal by 238 runs - a new record

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.