தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள்,அங்கன்வாடி மையங்கள். விடுதிகள் கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு - செய்தி வெளியீடு எண் : 1792 - நாள் : 31.08.2023. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 31, 2023

தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள்,அங்கன்வாடி மையங்கள். விடுதிகள் கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு - செய்தி வெளியீடு எண் : 1792 - நாள் : 31.08.2023.

செய்தி வெளியீடு எண் : 1792 நாள் : 31.08.2023

தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப அவர்கள் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சேதமடைந்துள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் இதர கட்டுமானங்கள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே. பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக. சேதமடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் இதர கட்டுமானங்களை கண்டறிவது என்பது மிகவும் அவசியமாகிறது. ஆகவே, சேதமடைந்துள்ள பொதுக் கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள். அங்கன்வாடி மையங்கள். விடுதிகள். பேருந்து நிலையங்கள். அலுவலக கட்டடங்கள் மற்றும் இதர முக்கிய உட்கட்டமைப்புகளான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், பாலங்கள் ஆகியவை குறித்து ஒரு ஒருங்கிணைந்த மதிப்பீடு மற்றும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி பின்வரும் இனங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.