“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீங்கள்தான் வழிகாட்டி”: முதல்வர் மு.க.ஸ்டாலின் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 9, 2023

“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீங்கள்தான் வழிகாட்டி”: முதல்வர் மு.க.ஸ்டாலின்



“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீங்கள்தான் வழிகாட்டி”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்.

நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க செல்லும் 225 அரசுப்பள்ளி மாணவர்கள்.

எட்டாக்கனியாய் இருந்த கல்வி இன்று அனைவருக்கும் கிட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல கல்வி கிடைத்து உயர்கல்விக்கு செல்ல வேண்டும்.

ஐஐடியில் படிக்க இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் சென்றுள்ளனர்.

ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்-சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க செல்லும் 245 அரசுப்பள்ளி மாணவர்கள்;

✦ எட்டாக்கனியாய் இருந்த கல்வி இன்று அனைவருக்கும் கிட்டியுள்ளது;

✦ அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது;

✦ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல கல்வி கிடைத்து உயர்கல்விக்கு செல்ல வேண்டும்;

✦ ஐஐடியில் படிக்க இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் சென்றுள்ளனர்;

✦ ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்”

- சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு அரசு மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் படித்து மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். 225 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேர்ந்த அரசுப் பள்ளி மானவர்களுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கும் பாராட்டு விழாவில் முதல்வர் பங்கேற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் இருக்க கூடிய அரசு மாதிரி பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்துள்ளார்கள் அந்த வகையில் 225 மாணவர்கள் சென்னை ஐஐடி அதே போன்று திருச்சி என்ஐடி மேலும் தேசிய அளவிலான சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள்.

இவர்களுகளுக்கான பாராட்டு விழா பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக நூறாண்டு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளையும் வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்ரமணியன், சேகர்பாபு, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி உளியிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகம் முழுவதிலும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். கல்வியில் சிறிய உதவி கிடைத்தாலும் தமிழ்நாடு மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.. கல்வியில் சிறிய உதவி கிடைத்தாலும் தமிழ்நாடு மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் கடுமையான முயற்சியால் இது சாத்தியமாயிற்று. கடந்த ஆண்டு ஐஐடி-க்கு சென்ற அரசுப்பள்ளி மாணவர் ஒருவர்தான், இந்த ஆண்டு 6 பேர் ஐஐடி-க்கு செல்கின்றனர் என்று முதல்வர் கூறியுள்ளார்

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழும் மடிக்கணினியும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர் உரையாற்றிய முதல்வர்; முந்தைய தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் நமக்கு கல்வி கிடைத்துள்ளது. நீதிக்கட்சி காலத்தில் இருந்து சமூகநீதி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இன்றைய நாள் தமிழ்நாடு பள்ளிக்கல்வி வரலாற்றில் முக்கியமான நாள். பள்ளிக்கல்வித்துறையில் தினந்தோறும் முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். ஒரு காலத்தில் கல்வி எட்டாக்கனியாக இருந்தது.நீதிக்கட்சி மூலம் கல்வி கிடைக்க வழிவகை கிடைத்துள்ளது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், கல்வியிலும் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடும் இதுதான். சிறிய தூண்டுதல் கிடைத்தால் கூட தமிழக மாணவர்கள் தூள் கிளப்பி விடுவார்கள். முதன்மை கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை உயர வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும் நோக்கில் தொடங்கப்பட்டதுதான் அனைவருக்கும் ஐஐடி திட்டம். 225 மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு செல்ல உள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கடுமையான முயற்சியால் இது சாத்தியமானது. உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட இந்தாண்டு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஐஐடி-க்கு சென்ற அரசுப்பள்ளி மாணவர் ஒருவர்தான், இந்த ஆண்டு 6 பேர் ஐஐடி-க்கு செல்கின்றனர். கடந்த ஆண்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 75, இந்த ஆண்டு 225 பேர் செல்கின்றனர்.உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் செல்லும் போதுதான் சமூகநீதி முழுமையடைகிறது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் மலர வேண்டும் எனில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பு மட்டுமே முழு நேர கவனமாக இருக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.