ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக் மாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 19, 2023

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக் மாற்றம்

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக் மாற்றம்!

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ராஜாராமன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கூடுதல் முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தொழில் துறை மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனர் சிகி தாமஸ் வைத்தியன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக இருந்த ஆனந்தகுமார் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக் தொழிலாளர் நலத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவண காப்பகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆணையர் பிரகாஷ் வருவாய் துறை நிர்வாக கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

வருவாய்த்துறை நிர்வாக கூடுதல் ஆணையர் கலையரசி சுகாதாரத்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டாளர் வெங்கட பிரியா ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக சிறு தொழில் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மோனிகா ராணா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய செயல் இயக்குனராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திட்டம் மற்றும் மேம்பாட்டு துறை கூடுதல் செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இடமாற்றம்; ஆனந்தகுமார், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனராக இடமாற்றம்!

PUBLIC (SPECIAL A) DEPARTMENT

G.O. Rt. No.3512 - Dated:19.08.2023

Sobakiruthu, Aavani-2, Thiruvalluvar Aandu-2054.

READ:

(i) G.O. Rt.No.2729, Public (Special-A) Department, dated 30.06.2023. (ii) G.O. Rt.No.2734, Public (Special-A) Department, dated 01.07.2023. (i) G.O. (D) No. 289, Public (Special-A) Department, dated 17.08.2023.

ORDER:

Under Rule 4 (2) of the IAS (Cadre) Rules, 1954, sanction is accorded for the creation of a temporary post of Secretary to Government, Revenue and Disaster Management Department in the Super Time Scale of IAS for a period of one year with effect from the date of appointment, or till the need for it ceases, whichever is earlier.

2. The following transfers and postings are notified:-

அதன் விவரம்:

1) சிஜி தாமஸ் - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமனம்

2) அர்ச்சனா பட்நாயக் -தொழிற்துறை ஆணையராக நியமனம்

3) ராஜாராமன் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலராக நியமனம்

4) ஆனந்தகுமார் -அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குரனாக நியமனம்

5) குமார் ஜெயந்த் - தொழிலாளர் நலத்துறை கூடுதல் செயலராக நியமனம்

6) வேங்கட பிரியா - ஆசிரியர் தேர்வு வாரிய இயக்கனராக நியமனம்

7) மோனிகா ரானா - மதுரை ஊரக மேம்பாட்டுத்துறை அதிகாரியாக நியமனம்

8) விக்ரம் கபூர் - சிறுதொழில் மேம்பாட்டுத்துறை தலைவராக

9) சரவணன் - சென்னை குடிநீர் வழங்கல், மற்றும் கழிவு நீர் அகற்றம் வாரிய செயல் இயக்குனராக நியமனம்

10) பூஜா குல்கர்னி - நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சிவில் சப்ளை ஆணையர்

11 ) பிரகாஷ்- வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக நியமனம்

12) கோபால் - திட்டம் மற்றும் மேம்பாட்டு கூடுதல் செயலராக நியமனம்

தவிர மாவட்ட வருவாய் அலுவலர்கள் 12 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.