முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை தண்டனை - எதற்கு??? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 2, 2023

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை தண்டனை - எதற்கு???



அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை தண்டனை - எதற்கு???

கடந்த அதிமுக ஆட்சியின் போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஞானபிராகசம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தனக்கு வரவேண்டிய பணபலன்கள், மற்றும் பதவி உயர்வு சம்பந்தமாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த் வழக்கை விசாரணை செய்த அப்போதைய நீதிபதி சம்பந்தபட்ட மனுதாரருக்கு சேர வேண்டிய பணபலன்களை உரிய முறையில் கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவானது, கடந்த அதிமுக ஆட்சியில் 2017-18 ஆண்டுகளில் பிறபிக்கபட்டது. ஆனால் தொடர்ந்து அரசு அதிகாரிகள் இவருக்கு சேர வேண்டிய எந்த பணபலன்களையும் ஒப்படைக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டும் இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீண்டநாட்களாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு இன்று மேண்டும் விசாரணைக்கு வந்தது. எற்கனவே விசாரணை செய்த போது அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது இல்லை. உயர்நீதிமன்றம் மிகுந்த விசாரணை செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உத்தரவு பிறபிக்கிறது. ஆனால் அந்த உத்தரவை யாரும் மதிப்பதில்லை, என கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிபிரதீப் யாதவ் உள்பட கல்வித்துறையை 3 அதிகாரிகளுக்கு 2 வார சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது. அதன்படி வரும் 9-ம் தேதி 3 பேரும் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஆஜராக வேண்டும். அதன் பிறகு சிறைக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடபட்டுள்ளது. மேலும் ரூ.1000 அபராதம் விதிக்கபட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ்-க்கு 2 வார சிறை - நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு! - CONTEMPT OF COURT ORDER - PDF CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.