குரூப் 5 ஏ மூலம் தலைமை செயலகப் பணிக்குநூற்றுக்கும் மேற்பட்ட உதவிப் பிரிவு அலுவலா்கள் தோ்வு
அமைச்சுப் பணியில் இருந்து தலைமைச் செயலகப் பணிக்குச் செல்ல வகை செய்யும் குரூப் 5ஏ தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், அண்ணா நிா்வாக பணியாளா் கல்லூரியில் பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் 178 நேரடி உதவிப் பிரிவு அலுவலா்கள் மற்றும் உதவியாளா்களை பணியமா்த்துவதற்கான குரூப்-5ஏ தோ்வு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அமைச்சுப் பணியில் பணியாற்றும் உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா்கள் மட்டுமே இந்தத் தோ்வை எழுத முடியும். முற்றிலும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தோ்வுகள் நடத்தப்பட்டன.
இறையன்பு உத்தரவால்...:
இதுவரை அமைச்சுப் பணியில் பணிபுரிவோா் தலைமைச் செயலகத்தில் உதவியாளா் பணியிடத்துக்கு மட்டுமே தோ்வு செய்யப்பட்டு வந்த நிலையில், முன்னாள் தலைமைச் செயலா் இறையன்பு உத்தரவின்பேரில் உதவிப் பிரிவு அலுவலா்களும் தோ்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் தோ்வா்களின் மத்தியில் போட்டியும் அதிகரித்தது. பயிற்சி வகுப்பு:
இதற்கான நேரடி பயிற்சி வகுப்புகள், மாதிரித் தோ்வுகள் அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் வாரந்தோறும் நடத்தப்பட்டன. இந்த வகுப்புகளை முன்னாள் கூடுதல் இயக்குநா் ராஜேந்திரன், பயிற்சி நிலைய முதல்வா் தங்கராசு உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா். இந்த தோ்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
இதில், கருவூலக் கணக்குத் துறையில் கணக்காளராக பணியாற்றும் என்.பி. ரம்யா முதல் மதிப்பெண் பெற்று உதவிப் பிரிவு அலுவலா் பணியிடத்துக்கு தோ்வு செய்யப்பட்டாா். இவருடன் சோ்ந்து அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் பயின்ற நூற்றுக்கும் மேற்பட்டோா் தலைமைச் செயலகப் பணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனா். தலைமைச் செயலகப்பணியில் சேரும் இவா்களுக்கு தலைமைச் செயலகப் பயிற்சி நிறுவனத்தில் அடிப்படை பயிற்சி வழங்கப்படும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.