பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ்-க்கு 2 வார சிறை - நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு! - CONTEMPT OF COURT ORDER - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 3, 2023

பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ்-க்கு 2 வார சிறை - நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு! - CONTEMPT OF COURT ORDER - PDF

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு!

கடந்த ஆதிமுக ஆட்சியில், பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ்-க்கு 2 வார சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கடந்த அதிமுக ஆட்சியின்போது கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய பள்ளிக் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை விதிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை சார்ந்த பணப்பலன் கோரி நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கடந்த 2019-ல் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அப்போதைய கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்தது.

கல்வித்துறை சார்ந்த பணப்பலன் கோரி நெல்லையைச் சேர்ந்த ஞானபிரகாடம் என்பவர் தொடந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை முறையாக செயல்படுத்தாததால் நடவடிக்கை! CONTEMPT OF COURT ORDER CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.