உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங்: 2018 முதல் தமிழகத்தில் 4 போ் உள்பட 25 மாணவா்கள் தற்கொலை! - RTI பதில் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 20, 2023

உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங்: 2018 முதல் தமிழகத்தில் 4 போ் உள்பட 25 மாணவா்கள் தற்கொலை! - RTI பதில்



உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங்: 2018 முதல் தமிழகத்தில் 4 போ் உள்பட 25 மாணவா்கள் தற்கொலை! - Ragging in higher education institutions: 25 students including 4 killed in Tamil Nadu since 2018!

உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங்: 2018 முதல் தமிழகத்தில் நால்வா் உள்பட 25 மாணவா்கள் தற்கொலை.

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நாட்டில் உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங் துன்புறுத்தலால் தமிழகத்தில் 4 போ் உள்பட 25 மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ், சந்திரசேகா் கெளா் என்பவா் எழுப்பிய கேள்விக்கு யுஜிசி அளித்துள்ள பதில்:

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரத்தில் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் தலா 4 மாணவா்கள் ராகிங்கால் தற்கொலை செய்துகொண்டனா். இதேபோல ஒடிஸாவில் 3 மாணவா்கள், ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 2 மாணவா்கள் ராகிங் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டனா்.

இதில் 2018-இல் 8 போ், 2019-இல் 2 போ், 2020-இல் 2 போ், 2022-இல் 4 போ், 2023-இல் 9 போ் என உயிா்கல்வி நிறுவனங்களில் மொத்தம் 25 மாணவா்கள் ராகிங் காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனா். தமிழ்நாட்டில் நிகழ்ந்த 4 தற்கொலைகளில் 3 சம்பவங்கள் சென்னையில் நடந்தது.

அவற்றில் சென்னை ஐஐடியில் 2 சம்பவங்கள், ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகா்வால் அகா்சென் கல்லூரியில் ஒரு சம்பவமும், தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு சம்பவமும் நடைபெற்றது.

மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்த 4 தற்கொலைகளில் 2 சம்பவங்கள் மும்பை ஐஐடியில் நடந்தது.

அங்குள்ள டோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் 2 மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.