அமைச்சுப் பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு - கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 4, 2023

அமைச்சுப் பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு - கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!

அமைச்சுப் பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு - கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!

தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக் கல்வி சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத்தேர்வுபாகம்-1 10:03:2020க்கு முன் தேர்ச்சி பெற்றுமுன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களுக்கு முன் ஊதிய உயரிவு அனுமதிக்கக் கோரியது கூடுதல் விவரங்கள் கோரப்பட்டமை - ஒப்பிட்டு பணி மேற்கொள்ளுதல் சார்ந்து

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்கள் துறைத் தேர்வான சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம் -1இல் (Account Test for Subordinate Officers Part-1) 10.03.2020க்கு முன்னர் தேர்ச்சி பெற்று நிருவாகக் காரணங்களினால் முன் ஊதிய உயர்வு அனுமதிக்கப்படாமல் உள்ள இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களுக்கு ஒரு முன் ஊதிய உயர்வு அனுமதிக்க உரிய விவரங்கள் பார்வையில் காணும் கடிதப்படி இவ்வலுவலகத்தில் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு, பார்வையிற்காண் அரசு கடிதத்தின்மூலம் திருப்பப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்களை ஒப்பீடு செய்யும்போது சில விவரங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் அரசுக்கு கருத்துருவினை முழுமையான அளவில் அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே, அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களிலிருந்தும் சார்ந்த பணியினை கையாளும் பிரிவு உதவியாளர்களை 10.03.2020க்கு முன்னர் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 தேர்ச்சி பெற்றவர்களில் முன் ஊதிய உயர்வு அனுமதிக்கப்படாதவர்கள் சார்ந்து தங்கள் அலுவலகத்தில் உள்ள விவரங்களுடன் (எவர் பெயரும் விடுபடவில்லை என்ற அலுவலரின் சான்று, கணக்குத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாள், ஒரு மாதத்திற்கான ஊதிய உயர்வு தொகை மற்றும் ஒரு வருடத்திற்கான மொத்த ஊதிய உயர்வு தொகை கணக்கீட்டுத்தாள் போன்ற சரியான விவரங்களுடன்)கீழ்கண்ட நாட்களில் இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.