உச்ச நீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி - உச்ச நீதிமன்ற ஆணை நகல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 18, 2023

உச்ச நீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி - உச்ச நீதிமன்ற ஆணை நகல்!



உச்ச நீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி - உச்ச நீதிமன்ற ஆணை நகல்!

உச்ச நீதி மன்றத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு மேல்முறையீட்டு மனு இன்று 18.08.2023 தள்ளுபடி! - இனி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.



முதுகலை ஆசிரியர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு மனு

SLP 018046 / 2023

SLP 018047/2023

Admission 18.08. 2023 எடுத்துக் கொள்ளப் Uட்டு மேல் முறையீட்டு மனுக்கள் we are not inclined & Dismissed

முதுகலை ஆசிரியர் , உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் சென்னை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு பட்டதாரி ஆசிரியர்களே உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக உரிமை உடையவர்கள் என தீர்ப்பளித்தது .இந்த தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . we not inclined என்பதனை ஏற்றுக் கொண்டதாகவோ , மறுத்ததாகவோ கருத இயலாது .தற்போதய நிலையில் செப்டம்பருக்குள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னையில் தொடர்ந்தால் உரிய ஆணை பெற முடியாது . செப்டம்பருக்கு பின்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியும் .இரு நபர் அமர்வில் முதுகலை ஆசிரியரில் இருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக சென்றவர்களை revert பற்றி குறிப்பிடப்படவில்லை .உயர் நீதிமன்றத்தில் Review வழக்கும் நிலுவையில் உள்ளது .

ஆ. மிகாவேல் ஆசிரியர் - மணப்பாறை 9047191706

CLICK HERE TO DOWNLOAD உச்ச நீதிமன்ற ஆணை நகல்! உச்ச நீதி மன்றத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு மேல்முறையீட்டு மனு இன்று 18.08.2023 தள்ளுபடி!

இனி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாணையின்படி *01.01.2016 நிலவரப்படி முதல் 2023 வரை யாரெல்லாம் முதுகலை* *ஆசிரியர்களாகப் பணியாற்றி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாறுதல்* *பெற்றார்களோ அவர்கள் அனைவரின் பணி மாறுதல் ஆணையும்* *இரத்து செய்யப்பட வேண்டும்*

இனி பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர், நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர் என்ற பாகுபாடெல்லாம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அனைவரும் முதுகலை ஆசிரியர்களே.
மீண்டும் வெற்றி வெற்றி அனைவருக்கும் வணக்கம். உயர்நிலைப்பள்ளி HM ஆக பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது என சென்னை டிவிஷன் பெஞ்ச் கடந்த 23-03. 2023ல் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சார்பில் புதுடில்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று 18. 8. 2023 காலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை ஆரம்பித்த உடனே நமது வழக்கறிஞரின் வாதத் திறமையால் அவர்கள் தொடுத்த வழக்கு இன்று Dismiss (தள்ளுபடி) ஆகி விட்டது என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் தர்மம் வென்று உள்ளது. www.kalviseithiofficial.com இதற்காக உழைத்த நமது கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் திரு செ.செல்வநாயகம் மற்றும் வழக்கின் கதாநாயகன் திரு. D. ராஜன் மற்றும் இதற்கு முழு நேரமும் உழைப்பையும், நிதியையும் செலவிட்டுள்ள நமது கழகத்தின் மாநில பொருளாளர் திரு ப.நடராஜன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் மற்றும் நிதி உதவி செய்துள்ள அனைவருக்கும் மாநில கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த வழக்கிற்காக மதுரை சென்று வழக்கறிஞரை அடிக்கடி சந்தித்து வந்த திரு ஜேசுதாஸ் பாண்டியன் மற்றும், திரு ட. சுப்பிரமணியன், திரு தங்கதுரை மற்றும் மாநிலத் தலைவர் திரு,த உதயசூரியன் மாநில பொதுச் செயலர் திரு VL பெனின் தேவகுமார் மற்றுமுள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்,

நல்லாசிரியர், ஆ வ அண்ணாமலை, மாநில சிறப்புத் தலைவர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், விழுப்புரம்.
கைபேசி எண் 94436 19586


CLICK HERE TO DOWNLOAD உச்ச நீதிமன்ற ஆணை நகல் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.