இரவு காவலர் நியமனம் இல்லை பாதுகாப்பின்றி அரசு பள்ளிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 21, 2023

இரவு காவலர் நியமனம் இல்லை பாதுகாப்பின்றி அரசு பள்ளிகள்

இரவு காவலர் நியமனம் இல்லை பாதுகாப்பின்றி அரசு பள்ளிகள்


-இரவு காவலர்கள் இல்லாததால், அரசு பள்ளி வகுப்பறை கட்டடத்தில், மனிதக்கழிவு பூசுவது போன்ற, மோசமான சம்பவங்கள் நடப்பதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில், 40,000த்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகளில், இரவு காவலர்கள், துப்புரவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சில இடங்களில் மட்டும், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், ஊராட்சி அலுவலகங்கள் வழியே, துப்புரவாளர்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு காகித அளவிலேயே நின்று போனது.

இதனால், பள்ளிகள் சுத்தமில்லாமலும், இரவு நேரங்களில் யார் வேண்டு மானாலும், நுழையும் வகையிலும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

திருத்தணியை ஒட்டிய மத்துார் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், மூன்று நாட்களுக்கு முன், வகுப்பறை கட்டட பூட்டில், மனிதக்கழிவு பூசப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

யார் இந்த மோசமான செயல்களில் ஈடுபட்டனர் என்று தெரியவில்லை.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய வேண்டும்.

அதேநேரம், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டுமானால், பள்ளி வளாகங்களில் காவலர்கள் பணியில் இருக்க வேண்டும்

. ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை அனுமதித்த, 6,000 இடங்களில் கூட, இன்னும் இரவு காவலர்கள் நியமிக்கப்படவில்லை.

அரசு அலட்சியம் காட்டாமல், இரவு காவலர்கள், துாய்மை பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.