ஈரோட்டில் அரசுப் பள்ளி ஆசிரியை குத்திக் கொலை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 20, 2023

ஈரோட்டில் அரசுப் பள்ளி ஆசிரியை குத்திக் கொலை!

ஈரோட்டில் அரசுப் பள்ளி ஆசிரியை குத்திக் கொலை

அரசுப் பள்ளி ஆசிரியை குத்திக் கொலை! ஈரோடு கொல்லம்பாளையம் வஉசி வீதியைச் சேர்ந்தவர் மனோகரன் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (53). வைரா பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு மனோகரன் நடை பயிற்சிக்காக வெளியே சென்று விட்டார். வீட்டில் புவனேஸ்வரி மட்டும் இருந்துள்ளார். மனோகரன் நடை பயிற்சி முடித்துக் கொண்டு பின்னர் மீண்டும் 8.30 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் கட்டிலில் புவனேஸ்வரி கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இதுகுறித்து சூரம்பட்டி காவல்துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்தனர். மோப்பநாய் வீரா சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் வெளியே ஓடி நின்றது. 

இது குறித்து சூரம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் ஆசிரியை ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.