எண்ணும் எழுத்தும் பயிற்சியை மதிப்பீடு செய்ய B.Ed படிக்கும் மாணவர்களா? ஆசிரியர்கள் கண்டனம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 26, 2023

எண்ணும் எழுத்தும் பயிற்சியை மதிப்பீடு செய்ய B.Ed படிக்கும் மாணவர்களா? ஆசிரியர்கள் கண்டனம்!

எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்றடைந்தது குறித்து மூன்றாம் நபர் மதிப்பீடு [THIRD PARTY EVALUATION] மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் , இம்மதிப்பீட்டினை மேற்கொள்ள அரசு , அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வியியல் [ B.Ed. ] கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளதால் அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வியியல் ஆண்டு [ B.Ed ] கல்லூரிகளில் பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் மாணவர்களை THIRD PARTY EVALUATION பணியில் மதிப்பீட்டாளராக [ENUMERATORS] செயல்பட அனுமதி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , இம்மாணவர்களுக்கு மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பயிற்சி அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 28.08.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. பள்ளிகளில் FIELD INVESTIGATION பணியானது 01.09.2023 முதல் 15.09.2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 1.9.2023 முதல் 15.09.2023 வரை impact assessment எண்ணும் எழுத்தும் THIRD PARTY ASSESSMENT நடைபெறும் எண்ணும் எழுத்தும் பயிற்சியை மதிப்பீடு செய்ய B Ed படிக்கும் மாணவர்களா? இது ஏற்புடையதல்ல. கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

அன்மையில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் , தொடக்கநிலை மாணவர்களைக் கையாளும் தகுதி மற்றும் உரிய பயிற்சி B.ed பயிற்சி பெற்றவர்களுக்கு இல்லை. மாறாக குழந்தைகள் நல கல்வி உளவியல் பயிற்சியைப் பெற்றுள்ள D.Ted பயின்றவர்களால் தான் கையாள இயலும் என கூறியுள்ளது. NCTE ன் உத்தரவை சமீபத்தில் ரத்து செய்ததுடன் மட்டுமல்லாது, அந்த உத்தரவு சட்டவிரோதம் என அறிவித்தது.


அதனை ஒட்டிய தமிழக அரசின் அரசாணை 12 நாள் 30.01.2020 பத்தி 3ல் 1 மற்றும் 3ல் குறிப்பிட்டுள்ள விசயங்களும், அரசாணை 13 நாள் 13.01.2023 - ல் annexure IV A -ல் பத்தி 4 மற்றும் 26-ல் குறிப்பிட்டுள்ள தொடக்க நிலையில் B.ed பயிற்சி பெற்றவர்கள் நியமனம் என்ற விசயங்களும் ரத்தாகிறது. இந்நிலையில், 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு (third party evaluation ) முன்றாம் நபர் மதிப்பீடு செய்ய B.ed பயிற்சி மாணவர்களை அனுமதிப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது - சட்டவிரோதமானது. இந்த உத்தரவை இயக்குநர் திரும்பப் பெற வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.