சந்திரயான் 3 மிஷன் வெற்றி - நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா..! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 22, 2023

சந்திரயான் 3 மிஷன் வெற்றி - நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா..!

சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவுக்கு சந்திரயான் -3 மேற்கொண்ட 3.84 லட்சம் கி.மீ. தூர பயணம் முழுவதும் நாசாவும் ஈ.எஸ்.ஏ.வும் உதவி செய்துள்ளன

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சந்திரயான் – 3 விக்ரம் லேண்டர். நிலவில் தடம் பதித்ததன் மூலம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த இந்தியா, திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் – 3 லேண்டர் தரையிறங்கியது. சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவுக்கு சந்திரயான் -3 மேற்கொண்ட 3.84 லட்சம் கி.மீ. தூர பயணம் முழுவதும் நாசாவும் ஈ.எஸ்.ஏ.வும் உதவி செய்துள்ளன. விண்வெளியில் வரலாறு படைக்க சந்திரயான்-3 தயாராகியுள்ளது. திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குகிறது, இதை உலகமே ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. கடைசி 15 நிமிடங்கள் முக்கிய கட்டமாக உள்ளதால் நாடு முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியா நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 2 திட்டம் மூலம் தரையிறங்க முயன்றது. இது இறுதிக்கட்டத்தில் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தில் இன்று விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. சந்திரயான் – 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளத, இந்த செயல்பாடு என்பது மொத்தம் 15 நிமிடங்கள் நடக்கும் நிலையில் கடைசி 7 நிமிடங்கள் தான் மிகவும் முக்கியம். அங்கு தான் மிகப்பெரிய சவால் உள்ளது எனவும், அந்த திக் திக் நிமிடத்தில் விக்ரம் லேண்டர் எப்படி நிலவில் தரையிறங்கும்? என்பது பற்றிய சிலிர்க்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம்காட்டி வருகின்றன. அந்த வகையில், நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில், கடந்த 2008ம் ஆண்டு ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும் அது உறுதிசெய்தது. அதன்பிறகு, 2019ம் ஆண்டு நிலவின் தென்துருவத்துக்கு ‘சந்திரயான்-2’ விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால் அதன் ‘லேண்டர்’ கருவி நிலவின் தரையில் மோதி உடைந்தது. ஆனால் ‘சந்திரயான்-2’ல் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டர்’ கருவி தற்போதும் நிலவைச் சுற்றி வந்து தகவல்களை தந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தில் இன்று விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. முன்னதாக சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது வரை இந்த திட்டம் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பூமியின் சுற்றுவட்ட பாதையை கடந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்-3, உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது. இந்திய விண்வெளி திட்டத்தின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட கூடியதாக இந்த நாள் உருவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சந்திரயான் 3 திட்டம் தான். அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளே அஞ்சி ஒதுங்கி நிற்கும் வேளையில் நிலவின் தென்துருவத்தில் இந்தியா விக்ரம் லேண்டரை இன்று தரையிறக்கம் செய்கிறது. சந்திரயான் – 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப்பட உள்ளது.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட உள்ளது. நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவது என்பது பெரிய சவாலானது. இதன் படிநிலைகள் மிக துல்லியமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் தரையிறங்குவது சிக்கலாகி விடும். எனவே, இஸ்ரோ விஞ்ஞானிகள் நொடிக்கு நொடி மிக கவனமாக செயல்பட்டு வருகின்றனர். தரையிறங்கும் நேரமானது வெறும் 15 நிமிடங்கள் தான். இந்த திக் திக் நிமிடங்கள் தான் வெற்றியை நிர்ணயிக்கும் நேரமாக இருக்கும். அதாவது கடைசி 15 நிமிடத்துக்கு முன்பு விக்ரம் லேண்டர் நிலவுக்கு மேலே குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றி வரும். இந்த சமயத்தில் விக்ரம் லேண்டர் வினாடிக்கு 1.6 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வரும். அப்போது ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி தரையிறக்கம் செய்யப்படும். தரையிறக்கும் செயல்முறை தொடங்கியவுடன் விக்ரம் லேண்டரில் உள்ள என்ஜினின் வேகம் என்பது 690 வினாடிகளில் பலமடங்கு குறைக்கப்படும். ஆரம்ப நிலையில் உள்ள வேகத்தை ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்கு என்ற அளவில் விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்படும். வினாடிக்கு 60 மீட்டர் வேகத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க பயணிக்கும். நிலவின் தரையில் இருந்து 7.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்போது விக்ரம் லேண்டர் ஒன்றுக்கு 2 முறை தரையிறங்கும் இடத்தை மீண்டும் சரிபார்க்கும். இதனை இஸ்ரோ மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும் கவனிக்கும். அதோடு இந்த செயல்முறையை வெற்றிகரமானதாக மாற்றும் வகையில் இஸ்ரோ தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் விக்ரம் லேண்டரின் அனைத்து சென்சார்களும் நன்றாக செயல்பட்டு தரையிறங்கும் பணியை வெற்றிகரமாக நிகழ்த்த வேண்டிய முக்கியமான கட்டம் இதில் இருந்து தான் தொடங்கும். அதன்பிறகு விக்ரம் லேண்டர் பைன் பிரேக்கிங் என்ற படிநிலையை அடையும். இங்கு விக்ரம் லேண்டர் செங்குத்தாக மாறும். இது சாதாரணமான காரியம் இல்லை. ஏனென்றால் நிலவின் நீள்வட்டபாதையில் கிடைமட்டமாக சுற்றிய விக்ரம் லேண்டரின் வேகத்தை குறைத்து நிலவின் தரையை நோக்கி கீழ்நோக்கி பயணிக்க வைப்பது உண்மையில் சவால் நிறைந்தது.

மேலும் தரையிறங்குவதற்கு முன்பாக உள்ள 7 நிமிடங்கள் என்பது விக்ரம் லேண்டர் என்பது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நிலவின் மேல்பகுதியில் மிதக்குமாம். இந்த வேளையில் நம்மை போலவே தான் இஸ்ரோ விஞ்ஞானிகளும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள் என்கிறார்கள். இந்த சமயத்தில் விக்ரம் லேண்டர் என்பது முழுவதும் அதில் உள்ள சென்சார்கள், கேமராக்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் செயல்படும். மேலும் தரையிலிருந்து 800-1300 மீட்டர் உயரத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் இடத்தை நோக்கி நிலவின் மேல்பகுதியில் இருந்து கீழ்நோக்கி செல்லும். கேமராக்கள் படங்கள் எடுக்க தொடங்கும். அதோடு சென்சார்களும் ஆய்வு பணிகளுக்கான வேலைகளை தொடங்கும். அப்போது 12 வினாடிகள் கழித்து உயரம் 150 மீட்டராக குறையும். இந்த வேளையில் அதிதொழில்நுட்பத்துடன் கூடிய முன்கூட்டிய ஆபத்தை அறியும் வகையிலான கேமரா ஒன்று தரையிறங்கும் இடத்தில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? என்பதை சரிபார்க்கும். அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் அடுத்த 73 வினாடிகளில் விக்ரம் லேண்டர் 150 மீட்டர் தொலைவை கடந்து நிலவின் தென்துருவத்தில் கால்பதிக்கும். இதுதான் இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் புதிய மைல்கல்லாகும். அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்து ஆய்வை தொடங்கும். ரோவர் நிலவில் பயணித்து இந்திய தேசியக்கொடி, இஸ்ரோவின் லோகோவை மண்ணில் பதித்து 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும். அதோடு நிலவின் கால்பதித்த 4வது நாடு என்ற பெருமை ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைக்கும். அதோடு நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற அழியாத சாதனையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த சாதனைமிகுந்த தருணங்களை இஸ்ரோ ஒளிப்பரப்பு செய்து வருகிறது.

விக்ரம் லேண்டர் மணிக்கு நிலவில் தரை இறங்குவதற்கு முன் கடைசி 20 நிமிடங்கள் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது: ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 3 செயற்கை கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட கவுண்டன் எல்லாம் தயார் நிலையில் இருக்கக்கூடிய ஏவுகளன், அதில் மூக்கு பகுதியில் இருக்கும் செயற்கைகோள், தரக்கட்டுப்பாட்டு கருவிகள் எல்லாம் சரியாக இருக்குதா என்று ஒவ்வொரு நிமிடமும் சரிபார்க்கப்பட்டு வந்தது. கடைசியில், மிஷின் ஆபரேட்டர் எல்லோரையும் அழைத்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அதன் இறுதிக்கட்டத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த சில நாட்களாக நிலாவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் தாய் கழகத்தில் இருந்து பிரிந்து, இரண்டு கட்டங்களாக பிரிந்து, அதன்பிறகு அதன் சுற்றுவட்ட பாதைகளை குறைத்து நிலவுக்கு பக்கத்தில் 113 கி.மீ. தூரத்தில் நீள்வட்ட பாதையில் உள்ளது. சந்திரயான்-2 ஆர்பிட்டர் செய்தி பரிமாற்றம் கொடுக்க முடிகிறது. இப்போது எல்லாமே கடைசி கட்டத்தில், அதாவது தானாக இயங்கும் அளவுக்கு அது தயார்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள கேமராக்கள் கீழ் நோக்கி பார்க்கும். அப்போது போகக்கூடிய பாதை சரியாக செல்கிறதா என்று பார்க்கப்படும். 1.7 செகன்ட் வேகமும், திசையும் மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் தரையிறங்க ரெடி என்று சொன்னதும், ஹரிகோட்டாவில் இருந்து எப்படி நகர்ந்து சென்றதோ, அதேபோன்று 25 கி.மீ. தூரத்தில் இருந்து நகர தொடங்கும். இப்போது சரியான பாதையில் செல்கிறதா என்றா கடைசி 15, 20 நிமிடத்தில் இங்கிருந்து பார்க்க முடியும்.

இறங்கின பிறகு மெதுவாக மெதுவாக லேண்டர் பகுதியில் தூசி வந்திருக்கலாம். அதை சரி செய்து அடுத்த பணிகளை தொடங்கும். உலக அளவில் 4, 5 தரை கட்டுப்பாட்டு நிலையங்கள் உள்ளது. அங்கிருந்தும் பரிசோதனை செய்யப்படும். இறங்குவதை ஆஸ்திரேலியாவில் இருந்துதான் தரவுகள் வரும். பெங்களூரில் இருந்து பார்க்க முடியாது. கடைசி நேரத்தில் எல்லாம் சரியாக இருக்கும்போது, இறங்குவதற்கு கட்டளை கொடுக்கப்படும். அதன்பிறகு தானே, அதன் செயல்பாட்டை தொடங்கும். இதை மாலை 5.20 மணியில் இருந்து தொலைக்காட்சியில் நாம் வீட்டில் இருந்தே பார்க்கலாம். மாலை 5.20 மணியில் இருந்து வேகம், தொலைவு படிப்படியாக குறைக்கப்படும். வினாடிக்கு 1.7 கி.மீ. வேகத்தில் வரும். மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகமாக இது இருக்கும். 5, 6 நிமிடத்தில் 25 கி.மீ. தூரத்துக்கு கொண்டு வரப்படும். அதன்பிறகு வேகம் குறைக்கப்படும். 8 கி.மீ. தூரத்தில் வரும்போது ஈர்ப்புவீசைக்கு ஏற்ப வேகம் குறைக்கப்படும். வினாடிக்கு 1 மீட்டர் குறைக்கப்படும். இது கடைசி 20 நிமிடங்களில் நடக்கும். கீழே விழும்போது சாம்பல் நிற தூசி மேலே விழும். காற்றுமண்டலம் இல்லாததால் சிறிதுநேரத்துக்கு பிறகு விக்ரம் லேண்டரை சுற்றி உள்ள 4, 5 கேமராக்கள் மூலம் தூசிபடலம் சரியாகிவிட்டதாக என்று பார்த்துவிட்டு, லேண்டரில் உள்ள கதவு திறக்கப்படும். ஒரு கதவு பனி, வெயில் காலம் என்றால் திறக்க கஷ்டப்படுவதுபோல், இயந்திரத்தில் உள்ள கதவு திறப்பதும் ஒரு முக்கியமாக கட்டமாகும். கதவு திறந்தபோது, அதில் உள்ள சோலார் தகடு விரிக்கப்பட்டு, சூரியஒளி மூலம் இயங்கப்படும். அதன்பிறகு கீழே இறக்கப்படும். இதையெல்லாம் விக்ரம் படம் எடுக்கும். தூசி படலம் நல்லா போனபிறகு, தரைகட்டுப்பாட்டில் இருந்து இறங்கி நிலவில் விக்ரம்லேண்டர் இறங்கும். இந்தியாவின் தேசிய சின்னமாக 4 முகம் இருப்பதுபோல் சக்கரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் நிலவில் பதிவு செய்யப்படும். இவை அனைத்தையும் பொதுமக்கள் நேரடியாக இன்று மாலை பார்க்க முடியும். மொத்தத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் கடைசி 20 நிமிடங்கள் திக் திக் நிறைந்த முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவுக்கு சந்திரயான் -3 மேற்கொண்ட 3.84 லட்சம் கி.மீ. தூர பயணம் முழுவதும் நாசாவும் ஈ.எஸ்.ஏ.வும் உதவி செய்துள்ளன

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.