25.08.2023 முதல் காலை உணவுத்திட்டம் - அனைத்து மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 15, 2023

25.08.2023 முதல் காலை உணவுத்திட்டம் - அனைத்து மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

25.08.2023 முதல் காலை உணவுத்திட்டம் - அனைத்து மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06

ந.க.எண்.020255/கே5/2023, நாள்.14.08.2023

பொருள் -

தொடக்கக் கல்வி மாண்புமிகு முதலமைச்சரின் காலை - உணவு திட்டம் விரிவுபடுத்துதல். நாகை மாவட்டம், திருக்குவளை 25.08.2023 அன்று துவக்க விழா - ஏற்பாடுகள் செய்தல்-தொடர்பாக,

பார்வை

அரசாணை (நிலை) எண்.33, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை (சந4-1) துறை நாள்.07.06.2023 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை எண்.5311523/SW4-1/2023-3 நாள்:10.08.2023

பார்வை (2)ல் காணும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் அரசு கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

பார்வை (1)ல் காணும் அரசாணையின்படி, மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு விரிவுபடுத்தப்படுகிறது. அத்திட்டம் நாகை மாவட்டம், திருக்குவளையில் 25.08.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கப்படுகிறது. அதே நாளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் சார்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பார்வை (2)ல் காணும் கடிதம் மூலம் ஆயத்த பணிகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியரின் அறிவுரையினை பெற்று அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அத்திட்டத்தினை செயல்படுத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.