நான்காண்டு பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம்! ஆகஸ்ட் 16 முதல் மாணவர் சேர்க்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 15, 2023

நான்காண்டு பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம்! ஆகஸ்ட் 16 முதல் மாணவர் சேர்க்கை



நான்காண்டு பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம்! ஆகஸ்ட் 16 முதல் மாணவர் சேர்க்கை

தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நான்காண்டு ஒருங்கிணைந்த B.Ed பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நான்காண்டு பட்டப்படிப்பில் பி.எஸ்.சி., பி.எட், பி.ஏ, பி.எட் ஆகிய பாடப்பிரிவில் ஆறு பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான பி.எட் பட்டப்படிப்பினை படிப்பதற்கு 10+2+3 என்ற அடிப்படையில் இளநிலை பட்டப் படிப்பினை முடித்திருக்க வேண்டும். ஆனால் தேசிய கல்விக் கொள்கையில், இளங்கலை பட்டப்படிப்புடன், பி.எட் பட்டப்படிப்பும் சேர்த்து நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகம் 2023-24 ஆம் கல்வி ஆண்டு முதல் ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் NCTE விதிமுறைகளின் படி பி.எஸ்.சி., பி.எட், பி.ஏ. பி.எட் படிப்புகளில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என அதன் பதிவாளர் நாதசுப்பிரமணி அறிவித்துள்ளார்.அதில், "மாணவர்களின் சேர்க்கை செய்யப்படும் விபரத்தை, ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்களுக்குரிய கட்டணத்தை வசூல் செய்து அதனையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்

என அதன் பதிவாளர் நாதசுப்பிரமணி அறிவித்துள்ளார்.அதில், "மாணவர்களின் சேர்க்கை செய்யப்படும் விபரத்தை, ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்களுக்குரிய கட்டணத்தை வசூல் செய்து அதனையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.