21-08-2023 வரை வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் சரிபார்க்கும் பணி - ஒரு மணி நேரம் முன்பாக அலுவலகம் / பள்ளியிலிருந்து செல்ல அனுமதி - CEO Proc - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 9, 2023

21-08-2023 வரை வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் சரிபார்க்கும் பணி - ஒரு மணி நேரம் முன்பாக அலுவலகம் / பள்ளியிலிருந்து செல்ல அனுமதி - CEO Proc

21-08-2023 வரை வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் சரிபார்க்கும் பணி - ஒரு மணி நேரம் முன்பாக அலுவலகம் / பள்ளியிலிருந்து செல்ல அனுமதி - CEO Proc வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 - 21-07-2023 முதல் 21-08-2023 வரை நடைபெறுதல் - வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (BLO) வாக்காளர் விவரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணிக்காக பணி நேரம் முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அலுவலகம் / பள்ளியிலிருந்து செல்ல அனுமதி - தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் www.kalviseithiofficial.com

தேர்தல்கள் தருமபுரி மாவட்டம் - எதிர்வரும் சிறப்பு சுருக்கத் - திருத்தம் 2024 - முன் திருத்தப் பணிகள் - வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் சரிபார்க்கும் பணி 21.07.2023 முதல் 21.08.2023 வரை நடைபெறுதுல் இப்பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களை பணி மேற்கொள்ள அனுமதி அளிக்க கோரியது - தொடர்பாக. பார்வை

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர், தருமபுரி கடிதம் ந.க.எண்.18074/2023/அ7 நாள் 02.08.2023.

பார்வையிற்காண் கடிதத்தில், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர்களின் விவரங்களை அவர்களது விட்டிற்கே நேரடியாக சென்று வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை சரிபார்க்கும் பணியில் முன்னேற்றம் ஏற்படவும் இப்பணியின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் தமிழ்நாடு, தலைமை தேர்தல் அதிகாரியினால் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுவதாலும், இப்பணியினை உரிய காலத்தில் முடிக்கப்படவேண்டியுள்ளதாலும், வாக்குச்சாவடி நிலைய அலுவலர் (BLO) களாக பணியமர்த்தப்பட்டுள்ள அலுவலர்களை மேற்குறிப்பிட்டுள்ள பணியினை மேற்கொள்வதற்காக அவர்களது பணிநேரம் முடிவடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அலுவலகம் / பள்ளியில் இருந்து செல்வதற்கு அனுமதி அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. www.kalviseithiofficial.com

மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளுக்கிணங்க, தருமபுரி வருவாய் மாவட்ட கல்வித் துறையில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் (BLO) களாக பணியமர்த்தப்பட்டுள்ள அனைத்து அலுவலர்களையும் அவர்களது பணிநேரம் முடிவடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அலுவலகம் / பள்ளியில் இருந்து செல்வதற்கு அனுமதி அளித்து இதன் மூலம் ஆணையிடப் படுகிறது. சார்ந்த வாக்குச்சாவடி அலுவலர்களை அவர்களது பணிநேரம் முடிவடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அலுவலகம் / பள்ளியில் இருந்து செல்வதற்கு அனுமதி அளித்திடுமாறு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை அலுவலர்கள் / அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். www.kalviseithiofficial.com

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.