முன்னாள் மாணவர்களை கண்டறியும் போதும் செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ளும் போதும் கவனத்தில் கொள்ளவேண்டியவை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 6, 2023

முன்னாள் மாணவர்களை கண்டறியும் போதும் செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ளும் போதும் கவனத்தில் கொள்ளவேண்டியவை

முன்னாள் மாணவர்களை கண்டறியும் போதும் செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ளும் போதும் கவனத்தில் கொள்ளவேண்டியவை:

1)கண்டறிந்த முன்னாள் மாணவர்கள் அப்பள்ளியில் படித்தவர்களாக இருப்பது அவசியம் குறைந்தபட்ச கால அளவு என்பது இல்லை. பள்ளியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைவரும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களே).

2) ஒவ்வொரு பள்ளியிலும் ஒருங்கிணைக்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் பள்ளியின் மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் பொறுப்புணர்வு கொண்டவராகவும் மற்றும் அதன் மீது நம்பிக்கை கொண்டவராகவும் இருத்தல் அவசியம். (முன்னாள் மாணவர்கள் பள்ளியின் செயல்பாடுகளில் பங்கேற்க கல்வித் தகுதி இல்லை). 3) முன்னாள் மாணவர்களை செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் முன் அவர்களின் பின்னணியும் நோக்கத்தையும் அறிந்து புரிந்து, தேவையெனில் பள்ளி மேலாண்மைக் குழுவுடன் காலந்தோசித்து ஈடுபடுத்துவது மிக முக்கியமாகும்.

4)நேரத்தை ஒதுக்கி தொடர்ச்சியாக பள்ளியின் செயல்பாடுகளில் தம்மை இணைந்து செயல்பட விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம்.

5) எவ்வித சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் நோக்கமும் வேறுபாடுகளும் உள்ள முன்னாள் மாணவர்களை குழந்தைகளுடனான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதை தவிர்ப்பது முக்கியம்.

6) முன்னாள் மாணவர்கள் வெளியூர்களில் இருக்கும் சூழலில் அவர்களின் நேரத்தை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு அவர்களை பள்ளியின் செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும்.

7) முன்னாள் மாணவர்கள் நன்கொடை ரீதியாக பள்ளியின் தேவைகளில் பங்கேற்க விரும்பினால், இணையதளம் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு (httis/nammaschooltnschoolsev.in) வாயிலாக அவர்களை இணைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.