ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 18, 2023

ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

Public Transfer Online Consultation for Teachers running under Adi Dravidar Health Department is held on 03.08.2023 & 04.08.2023! - ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் ஆன்லைன் கலந்தாய்வு 03.08.2023 & 04.08.2023 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது!

ஆதிதிராவிடர் நலம் - ஆசிரியர் பணியமைப்பு - கல்வி - பள்ளிகள் - 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு On- line இல் பொது மாறுதல் கலந்தாய்வு 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி அளவில் பொது மாறுதல் கலந்தாய்வு - Online மூலம் மாறுதல் கோரி பதிவு செய்யப்பட்ட பதவிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறுவது - தயார்நிலையில் இருக்க விவரம் தெரிவித்தல் - தொடர்பாக. பார்வை:

1. அரசு கடிதம் (நிலை) எண்.78/ஆதிந7/2023, நாள்.26.06.2023 அரசு கடிதம் (நிலை) 83/ஆதிந7/2023, நாள்.06.07.2023

3. தொடர்புடைய ஆவணங்கள்.

2023-2024 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர் / ஆகிய பதவிகளுக்கு 03.08.2023 அன்றும், பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர் / விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய விண்ணப்பிக்கும் பட்டதாரி / இடைநிலை காப்பாளர் ஆகிய பதவிகளுக்கு மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 04.08.2023 அன்றும் காலை 10.00 மணி அளவில் Online இல் பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் மாறுதல் கோரி பதிவு செய்த பதவிகளுக்கு மட்டும் ஆதிதிராவிடர் நல ஆணையரின் நேரடி பார்வையில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முன்னிலையில் நடைபெற உள்ளது. மேற்படி பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களில் Onlineல் நடைபெறுவதால், பொது மாறுதல் கலந்தாய்வுக்கு தேவைப்படும் கீழ்க்கண்ட வசதிகள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இணையதள (Internet) தொடர்புடைய நல்ல நிலையிலுள்ள கணினி (Computer) வைத்துக்கொள்ள வேண்டும். கலந்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கான ஆணையினை Print எடுக்க இக்கணினியுடன் Printer இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உடனுக்குடன் கலந்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கு ஆணைகளை உடனே Printout எடுத்து வழங்க வேண்டும்.

2. கலந்தாய்வு நடைபெறும் நாளன்று மின்தடை ஏற்படாதவாறு மாற்று ஏற்பாடுகள் (UPS, Generator) வசதி செய்து கொள்ள வேண்டும்.

3. அதேபோல் இணையதள வசதி (Internet Connection) தடைபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

4. முடிந்தவரை மாற்று ஏற்படாக Data Card தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

5. இணைய தள தொடர்பு வசதிக்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள NIC ஐ தொடர்பு கொண்டு இணையதள தொடர்பினை சரி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். 6.28.07.2023 அன்று காலிப்பணியிட விவரங்கள் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் தகுதியான நபர்களின் பட்டியல் மின்னஞ்சல் மூலம் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த விவரங்களை தங்களது அலுவலக தகவல் அறிக்கை பலகையில் கண்டிப்பாக ஒட்டி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

7. பார்வையில் காணும் அரசாணையின் படி கலந்தாய்வின் போது இடையூறு விளைவிக்கும் அல்லது கலந்தாய்வை தடுக்கும் ஆசிரியர்கள் / இதரப்பணியாளர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தகவலை தங்களது அலுவலக தகவல் அறிக்கை பலகையில் கண்டிப்பாக ஒட்டி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

8. 2023-2024 ஆம் ஆண்டு ஆன்லைன் பொது மாறுதல் கலந்தாய்வு 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கலந்தாய்வில் தனி கவனம் செலுத்தி எவ்வித குறைபாடுகளும் இன்றி உரிய முறையில் செவ்வனே நடத்திட வேண்டும் என மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர், உதவிக்கல்வி அலுவலர் மற்றும் தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பின்வரும் நாளில் இது தொடர்பாக குறைபாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் தொடர்புடைய அனைத்து அலுவலர்கள் மீதும் தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.