சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் “சத்தியதேவ் லா அகாடமி”- ஐ தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 17, 2023

சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் “சத்தியதேவ் லா அகாடமி”- ஐ தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்



Chief Minister M.K.Stalin started the "Sathyadev Law Academy" to guide law students. - சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் “சத்தியதேவ் லா அகாடமி”- ஐ தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,

65,034 பொறியியல் கல்லூரி மாணவர்கள், 83,223 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேற்று  முகாம் அலுவலகத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி “சத்தியதேவ்” அவர்களின் நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் “சத்தியதேவ் லா அகாடமி”-யை (Sathyadev Law Academy) தொடங்கி வைத்து, இலட்சினையை வெளியிட்டார்.

இந்தியாவில் சட்டத்தொழில் புரிவது சாதாரண மக்களுக்கு எளிதான காரியம் அல்ல. அப்படிப்பட்ட வழக்குரைஞர் தொழிலில் குறிப்பிட்ட ஒரு சிலரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

“வழக்குரைஞர் சட்டம்” 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பின்னரே வழக்குரைஞர் தொழில் ஒருமுகப்படுத்தப்பட்டு சட்டப்படிப்பு பரவலாக்கப்பட்டது. சட்டக்கல்லூரி மாணவர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு சமூக நீதி ஏற்பட்ட பின்னரே, பல்வேறு சமூகங்களிலிருந்தும் வழக்குரைஞர்கள் இத்தொழிலுக்கு வரத்தொடங்கினர்.

அதிக அளவிலான சட்டக்கல்லூரிகள், சட்டப் பல்கலைக்கழகங்கள் வந்த பிறகும், சட்டப்படிப்பு சாதாரண குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு சவாலாகவே உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ”சத்தியதேவ் லா அகாடமி”, அரசு சட்ட கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அகாடமியில் சட்ட நிபுணர்கள், சட்ட ஆசிரியர்களைக் கொண்டு சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு பாடங்களைக் காணொலியில் பதிவு செய்யப்பட்டு “யூ-டியூப்” வலைதளத்தில் பதிவேற்றப்படும். மாணவர்கள் அவற்றை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறலாம்.

பாடத்திட்ட காணொலி தயாரிப்பதற்கான நிதியை ஜெய்பீம் படத்தயாரிப்பாளர், நடிகர் சூர்யா அவர்களின் “ 2டி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனம் வழங்கிட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.