பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - உறுப்பினர் மாற்றங்கள்- கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கி உத்தரவு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - 12/07/2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 13, 2023

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - உறுப்பினர் மாற்றங்கள்- கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கி உத்தரவு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - 12/07/2023

School Management Committee Reconstitution - Changes in Membership - Order giving additional guidelines - Proceedings of the State Program Director - 12/07/2023 - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - உறுப்பினர் மாற்றங்கள்- கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கி உத்தரவு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - 12/07/2023 நாள்.12-07-2023 ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - உறுப்பினர் மாற்றங்கள்- கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.

பார்வை:

ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ந.க. எண்.449/C7/ஒபக/பமேகு/2023, நாள்: 16.03.2022

பார்வையில் கண்டுள்ள கடிதத்தின்படி, அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்டமைப்பு நடைமுறைகளானது கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி முதற்கட்டமாக அளிக்கப்பட்டது.

பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்குத் துணை நிற்கவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி உருவாக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவானது மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கூடி ஆலோசித்து குழந்தைகள் கல்வி மற்றும் பள்ளியின் வளர்ச்சி சார்ந்தத் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களை அனைத்து உறுப்பினர்களின் முழுமையானப் பங்கேற்புடன் நடத்திடவும், உறுப்பினர்களின் வருகை மற்றும் தவிர்க்கவியலாத மாற்றங்கள் சார்ந்து முடிவுகள் எடுக்கவும். பள்ளியின் நிதி நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையிலும் கூடுதல் வழிகாட்டுதல்கள் பின்வருமாறு வழங்கப்படுகிறது. கூடுதல் வழிகாட்டுதல்கள்:

1) பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் குழந்தைகள் வேறு பள்ளிக்கு மாறினாலோ அல்லது குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக அல்லது வேறு எந்தவொரு காரணத்திற்காக இடம்பெயர்ந்தாலோ அக்குழந்தையின் பெற்றோர் பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினராகத் தொடர இயலாது.

2) மேற்காணும் காரணங்களினால் எந்தவொரு பெற்றொர் உறுப்பினர் வகிக்கும் பொறுப்பும் காலியாகும் நிலையில் வேறொருப் புதிய பெற்றொர் உறுப்பினரை எந்தவொரு வழிமுறைகளைப் பின்பற்றியும் நியமிக்க இயலாது. அவ்விடம் பதவிக் காலம் முடியும்வரை காலியாக இருப்பதாகவேக் கருதப்பட வேண்டும்.

3) எனவே, மேற்காண் சூழலில் SNA கணக்குப் பரிமாற்றங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்க, கூட்டத் தீர்மானங்களில் கையொப்பமிட மற்றும் பிறநடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பானது

a. தலைவர் பொறுப்பு காலியாக உள்ள நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் துணைத் தலைவருக்கும், அல்லது 6. தலைவர் மற்றும் துணைத் தலைவர் பொறுப்புகள் காலியாக உள்ள நிலையில் பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் உறுப்பினர்களால் துணைத் தலைவர் தேர்வு வழிகாட்டுதலில் உள்ள பரிந்துரையின்படி உறுப்பினர் ஒருவருக்கும், (பார்வை-1) பள்ளி மேலாண்மைக் குழுவின் அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்போடு ஒரு சிறப்புக் கூட்டத்தினை தலைமையாசிரியர் ஏற்பாடு செய்து தீர்மானம் இயற்றி தற்காலிகப் பொறுப்பு மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.

4) பள்ளியின் தலைமையாசரியர் தன்விருப்பத்தின் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுவில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளுதல் கூடாது.

5) மாற்றங்களை மேற்கொள்ளும் முன் தலைவர் உள்ளிட்ட பெற்றோர் உறுப்பினரின் குழந்தைகள் அந்தப் பள்ளியில் படிக்கவில்லை என்பதையும் அக்குழந்தை எந்தப் பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றுள்ளார் என்ற விவரத்தையும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் தலைமையாசிரியர் வழங்கிட வேண்டும். எழுத்துப் பூர்வமாக

6) குழந்தைகளின் EMIS எண் மூலமாக அக்குழந்தை தொடர்ந்து வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பதை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்து, அதனை தலைமையாசரியர் உறுதிசெய்ய வேண்டும்.

மேற்காண் கூடுதல் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான குறிப்புகள்.

மேற்காண் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி உரிய மாற்றங்களை பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்புக் கூட்டத் தீர்மானங்கள் மூலமாகச் செயல்படுத்திட தலைமையாசிரியர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.